உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய நெருக்கடி; அலுமினியம் விலையும் அதிகரித்தது

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கின் முக்கிய அலுமினிய உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களினால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அலுமினியத்தின் விலை 4.7 சதவீதம் அதிகரித்து, ஒரு மெற்றிக் தொன் 3,453 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் இது 3,492 டொலர் வரையிலும் அதிகரித்தது.

இதற்கு முன்னர் 2022 மார்ச் மாதம் ரஷ்யா – உக்ரேன் போரின் போது ஒரு தொன் அலுமினியம் 4,073.50 டொலர் என்ற உச்சத்தைத் தொட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அலுமினியத்தைத் தொடர்ந்து செம்பு ஒரு தொன் 12,231 டொலராகவும், துத்தநாகம் 3,168 டொலராகவும் விலை அதிகரித்துள்ளன.

மத்திய கிழக்கின் இரு பெரும் உற்பத்தி நிறுவனங்கள் ஈரானின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான பஹ்ரைனிலுள்ள அல்பா நிறுவனம் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு வருகிறது. ஏற்கனவே தனது உற்பத்தித் திறனில் 19 சதவீதத்தை மூடுவதாக அல்பா நிறுவனம் அறிவித்துள்ளது.

எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம், தனது ஆலை சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போரினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கான அலுமினிய ஏற்றுமதியை முடக்கியுள்ளது.

லண்டன் உலோகச் சந்தையின் களஞ்சியங்களில் உள்ள அலுமினிய கையிருப்பு கடந்த மே மாதத்திலிருந்து 60 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளதால், சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

உலகின் மிகப்பெரிய நுகர்வு நாடான சீனாவில் தொழிற்சாலை நடவடிக்கைகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், அலுமினியத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.

போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் பொதியிடல் துறைகளில் அலுமினியம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், இந்த விலை அதிகரிப்பு சர்வதேச ரீதியில் பல பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”

kan

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை – மக்களவையில் கனிமொழி

April 17, 2026

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை

wa

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் கை சந்தித்தார் இலங்கையின் ஐ.நா தூதுவர்

April 17, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதியும் தூதுவருமான சுமித் தஸநாயக்க, ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டேர்க்

Education

கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

April 17, 2026

2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது

mak

வெலிக்கடை சிறைச்சாலையில் பிள்ளையானை வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்!

April 17, 2026

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

sss

தெதுரு ஓயாவில் மூழ்கி காணாமல் போன அறுவரின் சடலங்கள் மீட்பு

April 17, 2026

கொபேகனே (Kobeigane), குராட்டியகஹமுல பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

jud

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை – வழக்குவிசாரணை ஒத்திவைப்பு

April 17, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான மரண விசாரணை

arres

புன்னாலைக்கட்டுவானில் வன்முறையில் ஈடுபடுவதற்கு ஆயுதங்களுடன் காத்திருந்த மூவர் கைது

April 17, 2026

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான் பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் காத்திருந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மூவரை

photo-collage.png (9)

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை காணியை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டேன் – விகாராதிபதி

April 17, 2026

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ca

பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் பள்ளத்தில் வீழ்ந்து; ஒருவர் பலி மூவர் காயம்

April 17, 2026

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி