சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு சுமந்திரன் கடும் ஆட்சேபனை

குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தனி ஜெயலக்ஷி டி சில்வாவை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது கடுமையான ஆட்சேபனையை முன்வைத்தார். இந்த வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றில் நீதவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்குத் தொடுநர் தரப்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக் பண்டார ஆஜராவதற்கு சுமந்திரன் அடிப்படை […]

இரத்தினக்கல் வர்த்தகர் கொலை: காட்டில் மறைந்திருந்த சந்தேகநபர் கைது

கஹவத்தை இரத்தினக்கல் வர்த்தகரின் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கஹவத்தை, கட்டங்கே பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றில் மறைந்திருந்த போதே, தெல்வல பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே இவர் பிடிபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கஹவத்துகந்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 29ஆம் திகதி கஹவத்தை, கட்டங்கே பகுதியைச் சேர்ந்த […]

ஹோர்முஸ் நீரிணைக்குச் சென்று அங்கிருக்கும் எண்ணெயை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் – பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கு டிரம்ப்

ர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் விமான எரிபொருளைப் பெற முடியாத ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள், “தாமதமான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, நீரிணைக்குச் சென்று அங்கிருக்கும் எண்ணெயை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் (TAKE IT)” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “ஈரானின் முக்கிய தலைமைகளை அழிக்கும் (decapitation) நடவடிக்கையில் ஈடுபட மறுத்த நாடுகள், […]

பாராளுமன்ற தூதுக்குழு இந்தியாவுக்கு ஆய்வுப் பயணம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மார்ச் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை புதுடில்லிக்கு பாராளுமன்ற ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த இலங்கைத் தூதுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர்க்கட்சியின் முதற்சோலாசான் கஜயந்த கருணாதிலக, நலீன் பண்டார ஜயமஹ, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, அசித […]

மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதைத் தடுத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் நேரடி மானியங்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. அதற்கமைய பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அமைச்சரவை விசேட அனுமதி வழங்கியுள்ளது. அந்த தீர்மானத்துக்கமைய கடந்த மார்ச் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் […]

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பகிரங்க எச்சரிக்கை!

ஈரானுக்கு ஆதரவளிக்க சீனா மற்றும் ரஷ்யா எடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேவைப்படும் போதெல்லாம் அந்தத் தலையீடுகளுக்கு எதிராகச் செயற்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஹெக்செத், மத்திய கிழக்கு மோதலில் அடுத்த சில நாட்கள் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, ஈரான் ஆயுதப் படைகளிலிருந்து வீரர்கள் பெருமளவில் வெளியேறும் போக்குக் காணப்படுவதாக அவர் இதன்போது வெளிப்படுத்தினார். ரஷ்யாவும் […]

இந்தியா புறப்பட தயாரான ஈரான் விமானத்தைத் தாக்கிய அமெரிக்கா

இந்தியாவுக்கு உதவி பொருட்கள் பெற வர இருந்த ஈரான் விமானம் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் சேதமடைந்ததாக ஈரான் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உதவி பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த விமானம் சேதம் அடைந்து இருப்பது உதவி பெறுவதை பாதிப்பதாக அந்த நாடு குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் மஷ்ஹத் (Mashhad) விமான நிலையத்தில் நேற்று அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் வான்தாக்குதலில், Mahan Air நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானம் நாளை […]

ரயில் பெட்டிகள் பல தீக்கிரை

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு காலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 ரயில் பெட்டிகளில் இரண்டு பெட்டிகளே இவ்வாறு தீப்பற்றிக் கொண்டுள்ளன. தற்போது தீயணைப்புப் படையினரால் தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்தச் சம்பவத்தினால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் விதிகளை மீறியதாக விஜய் மீது பொலிஸார் வழக்கு

தமிழகத்தின் கொளத்தூர் பகுதியில் நடந்த பிரசாரத்தின்போது, தேர்தல் விதிகளை மீறியதாக விஜய் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் திங்கட்கிழமை (30) அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், அங்கிருந்து பெரம்பூரில் உள்ள தனது கட்சி அலுவலகம் நோக்கி பிரசார வாகனத்தில் சென்றார். அப்போது, வழியெங்கும் நின்றிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அந்த […]

தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது!

இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் உள்நாட்டு பலநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கையின் போது படகுடன் சேர்த்து 6 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு மற்றும் 6 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தரைக்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பிற்காக நாட்டைச் சூழவுள்ள கடல் வலயங்களை உள்ளடக்கிய வகையில் கடற்படையினர் முன்னெடுத்து […]