சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு சுமந்திரன் கடும் ஆட்சேபனை

குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தனி ஜெயலக்ஷி டி சில்வாவை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது கடுமையான ஆட்சேபனையை முன்வைத்தார்.

இந்த வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றில் நீதவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்குத் தொடுநர் தரப்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக் பண்டார ஆஜராவதற்கு சுமந்திரன் அடிப்படை ஆட்சேபனை தெரிவித்தார்.

சந்தேக நபரான நீதிபதி சுமார் 20 வருடங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றியவர் என்பதால், அதே திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த வழக்கில் தலையிடுவது ஒரு தெளிவான ‘அக்கறை முரண்’ (Conflict of Interest) என அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நீதியரசர்களின் விலகல்

இச்சம்பவம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து, பல நீதியரசர்கள் சந்தேக நபருடன் பணிபுரிந்த காரணத்தால் விலகியுள்ளதையும், தற்போது நான்காவது தடவையாக புதிய நீதியரசர் குழாம் அமைக்கப்படவுள்ளதையும் சுமந்திரன் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

முன்னைய வழக்குகள் மற்றும் விரைவான சட்ட ஆலோசனைகள் குறித்த சந்தேகம்

சந்தேக நபரின் பெற்றோருக்கு எதிரான மட்டக்களப்பு நீதிமன்ற வழக்கில் (B/406/2011), சட்டமா அதிபர் காரியாலயம் தலையிட்டு அவர்களை விடுவித்தமையை குறிப்பிட்ட சுமந்திரன், நூற்றுக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில் இந்த நீதிபதிக்காக மட்டும் மிக விரைவாக விடுவிப்பு ஆலோசனை வழங்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.

சந்தேக நபரின் வாக்குமூலம் மற்றும் பொலிஸாரின் அணுகுமுறை,

நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும், சந்தேக நபரிடம் நேரடியாக வாக்குமூலம் பெறாமல் அவரது மெய்ப்பாதுகாவலர் மூலம் தகவல் பெறப்பட்டதை அவர் விமர்சித்தார். இன்றுவரை சந்தேக நபரின் வாக்குமூலச் சுருக்கத்தை மன்றுக்கு சமர்ப்பிக்காமல் நேரடியாக சட்டமா அதிபருக்கு அனுப்பியமை பாரதூரமான விடயம் என வாதிடப்பட்டது.

நீதவான் நீதிமன்றின் அதிகாரம் குறித்த சட்ட வாதம்

சட்டமா அதிபரின் ஆலோசனை போலீசாரை கட்டுப்படுத்தினாலும், அது நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என குறிப்பிட்ட சுமந்திரன், குற்றவியல் நடைமுறை கோவை பிரிவு 120(3) இன் கீழ் நீதவானுக்கே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாக வலியுறுத்தினார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதில் மற்றும் எச்சரிக்கை

விடுவிப்பு ஆலோசனையை நீதவான் பின்பற்றத் தவறினால் அது “ஆற்று வெள்ளத்தைத் திறந்துவிட்டது போல” (Opening floodgates) பல விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்றும், ஆட்சேபனைகள் இருப்பின் அதனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

வழக்கின் பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகளின் விபரம்

2022 ஆம் ஆண்டு தொழிலதிபர் மஹாதேவன் முரளிதரனால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 486 மற்றும் 344 இன் கீழ் இந்த வழக்கு பெரியநீலாவணை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டது.

நேற்று (30) இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட மகாதேவன் முரளிதரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், என். சிவரஞ்சித், ஏ.எல். ஆசாத், சுஹால் பிஸ், டி. மதிவதனன், பி. துஷான், அ.நிதான்சன், ரிப்கான் கரீம் ஆகியோருடன் மேலும் பல சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. கஜேந்திரன் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வில் ஏனைய உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான் கே.எல்.எம். சாஜித் வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். அத்துடன் சந்தேக நபரின் வாக்குமூலம் உள்ளிட்ட முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன், மேலதிக நடவடிக்கைகள் குறித்து மே 04 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”

kan

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை – மக்களவையில் கனிமொழி

April 17, 2026

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை

wa

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் கை சந்தித்தார் இலங்கையின் ஐ.நா தூதுவர்

April 17, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதியும் தூதுவருமான சுமித் தஸநாயக்க, ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டேர்க்

Education

கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

April 17, 2026

2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது

mak

வெலிக்கடை சிறைச்சாலையில் பிள்ளையானை வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்!

April 17, 2026

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

sss

தெதுரு ஓயாவில் மூழ்கி காணாமல் போன அறுவரின் சடலங்கள் மீட்பு

April 17, 2026

கொபேகனே (Kobeigane), குராட்டியகஹமுல பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

jud

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை – வழக்குவிசாரணை ஒத்திவைப்பு

April 17, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான மரண விசாரணை

arres

புன்னாலைக்கட்டுவானில் வன்முறையில் ஈடுபடுவதற்கு ஆயுதங்களுடன் காத்திருந்த மூவர் கைது

April 17, 2026

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான் பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் காத்திருந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மூவரை

photo-collage.png (9)

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை காணியை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டேன் – விகாராதிபதி

April 17, 2026

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ca

பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் பள்ளத்தில் வீழ்ந்து; ஒருவர் பலி மூவர் காயம்

April 17, 2026

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி