வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தத்தால் சுகாதார சேவைகள் பாதிப்பு

சுகாதார அமைச்சின் சட்டவிரோதமான மற்றும் தன்னிச்சையான இடமாற்ற தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று (31) காலை 8.00 மணி முதல் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்ததையடுத்து, இலங்கை முழுவதும் மருத்துவ சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. இடைக்கால நியமனங்கள் மற்றும் கஷ்ட பிரதேச சேவை நிலையங்கள் உள்ளிட்ட 2026 ஆம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியலை, இடமாற்ற சபையின் அங்கீகாரம் இல்லாமலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாகவும் அமைச்சு வெளியிட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. […]
தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனனதினம்!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 128 ஆவது பிறந்ததினம் இன்று (31) மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் மற்றும் முன்னாள் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது, தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் அகவணக்கமும் செலுத்தப்பட்டன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், […]
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமை பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமை பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர், சிறுமியர்களின் வன்கொடுமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (31) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் பெண்கள் அதிகமாக கலந்து கொண்டு தமது உரிமைகள் சிறுவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கோஷம் எழுப்பி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ‘தமிழினத்தின் விழுப்பே விடுதலையின் முதற்படி’, ‘இராணுவ வெளியேறு’, ‘போதை வாஸ்து பாவனைகளை கட்டுப்படுத்து’ உள்ளிட்ட கோஷங்களை தாங்கிய […]
மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு புதைகுழி தொடர்பான வழக்கின் விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் பொலிஸாரின் சான்று சமர்ப்பணத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம் மற்றும் அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் […]
ஹோர்முஸ் ஊடாக பயணிக்கும் கப்பல்களுக்கு கட்டணம்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்திற்கு ஈரான் பாராளுமன்றக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் இத்திட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதன் கீழ் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கப்பல்கள் இந்த நீரிணை ஊடாக பயணிப்பது தடை செய்யப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலதிகமாக, ஈரானுக்கு எதிரான தடைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய நாடுகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓமானுடன் […]
மார்ச் மாதத்தில் பணவீக்கம் 2.2 % ஆக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான ஒட்டுமொத்த பணவீக்க வீதமானது 2026 பெப்ரவரி மாதத்திலிருந்த 1.6% இலிருந்து, 2026 மார்ச் மாதத்தில் 2.2% ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், உணவுப் பணவீக்கமானது 2026 பெப்ரவரியில் நிலவிய 0.2% இலிருந்து மார்ச் மாதத்தில் 0.7% ஆகவும், உணவல்லாத தொகுதியின் பணவீக்கம் 2.3% இலிருந்து 2.9% ஆகவும் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண்ணின் நேரடி வாக்குமூலம்

மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பிய பெண் தனது அனுபவத்தை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் தெரிவித்ததாவது, சம்பவ தினத்தில் காலை 10.30 மணியளவில் வவுணதீவு சந்தியில் தனது குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தபோது, ஒரு முச்சக்கர வண்டி வந்ததாகவும், அதில் ஏறுமாறு சாரதி கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். பணம் இல்லையென கூறியபோது 100 ரூபா எனக் கூறியதால், அவர் குழந்தையுடன் முச்சக்கர வண்டியில் ஏறியதாகவும், அங்கு மற்றொரு வயோதிபப் பெண்ணும் இருந்ததாகவும் […]
பச்சிலைப்பள்ளியில் 25 ஏக்கர் காணி படையினரின் பயன்பாட்டுக்காக சுவீகரிப்பு

பளை — கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் காணியை இராணுவத் தேவைகளுக்காகச் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்தின் 4-ஆவது மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படைப்பிரிவு (4 SLEME) அமைப்பதற்காக இக்காணி கோரப்பட்டுள்ளது. : பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஊரவன்னிக்கன்பற்று கிராமியப் பகுதி. காணியின் அளவு: சுமார் 25.73 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன. அளவீட்டுப் பணிகள்: இக்காணிகளை அளவீடு செய்யும் பணிகள் […]
இணுவிலில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர் அடையாளம் காணப்பட்டார்

இணுவில் — சந்நிதி ஆலயத்திற்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய முதியவர் ஒருவர், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 31, 2026) காலை இணுவில் கந்தசுவாமி ஆலயப் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாகச் சுன்னாகம் பொலிஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் சுதுமலை பகுதியைச் சேர்ந்த காசிப்பிள்ளை மதுருபாகன் (வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அடையாளம்: காசிப்பிள்ளை மதுருபாகன் (75 வயது), சுதுமலை. பின்னணி: […]
பருத்தித்துறையில் மூன்று மீனவர்களைக் காணவில்லை?

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருத்தித்துறை முனைப்பகுதியைச் சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் வழமை போன்று ஒரு படகில் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர். நேற்று திங்கட்கிழமை (மார்ச் 30, 2026) முதல் அவர்கள் கரை திரும்பாத நிலையில், அவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போது காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் சக தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.