நீரின் விலையை உயர்த்த கோரிக்கை!

போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலையை உயர்த்துவதறகு அனுமதி அளிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உற்பத்தி மூலப்பொருட்களின் விலை தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் தொழிலை தொடர்ந்து நடத்துவது கடினமாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். சந்தையில் விற்கப்படும் போத்தல் குடிநீரின் விலையை உயர்த்த அனுமதி வழங்குமாறு உற்பத்தியாளர் சங்கங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய மாகாண இயற்கை நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட நாடு முழுவதும் செயல்படும் உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் […]

துபாய் கடற்பரப்பில் குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

துபாய் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த குவைத் நாட்டுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் கப்பலில் ஏற்பட்ட தீயை துபாய் அதிகாரிகள் வெற்றிகரமாக அணைத்துள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர். பிரித்தானிய இராணுவத்தால் நடத்தப்படும் கடல்சார் கண்காணிப்பு அமைப்பான (UKMTO) தகவலின்படி,துபாய்க்கு வடமேற்கே 31 கடல் மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. “அல்-சல்மி” எனப்படும் இந்த மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல் முழுமையாக நிரப்பப்பட்ட நிலையில் இருந்ததால், […]

மின்சாரக் கட்டண உயர்வு: அரசாங்கம் மீது எதிர்க்கட்சிகள் கடும் சாடல்!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரவுள்ள மின்சாரக் கட்டண உயர்வு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்வனவு டெண்டர்களால் ஏற்பட்ட நிதி நஷ்டத்தை, பொதுமக்களின் மின்சாரக் கட்டணங்கள் மூலம் அரசாங்கம் ஈடுசெய்ய முயல்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்டணங்களைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம், தற்போது மக்களை […]

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றிலொன்றாக குறைப்பு

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தங்களது எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றிலொன்றுக்கும் அதிகமான அளவில் தானாக முன்வந்து குறைத்துக் கொண்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். வலுசக்தி நெருக்கடி காரணமாக நாட்டு மக்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் வகையில் அனைத்து அமைச்சர்களும் பொதுவான உடன்பாட்டிற்கு வந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு இணையாக, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் தங்களது எரிபொருள் ஒதுக்கீட்டை கணிசமான […]

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயம்

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) இன்று (31) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் அவர் நாட்டிற்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்கு வருகை தரும் ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர், இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சரும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், இதன்போது […]

திரு சபாரத்தினம் திருஞானசெந்திலால் (குட்டி)

யாழ். திருநெல்வேலி பனிக்கர் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு சபாரத்தினம் திருஞானசெந்திலால் (குட்டி) அவர்கள் நேற்று 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா கௌரிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகராணி அவர்களின் அன்புக் கணவரும், அனுஷியா(பிரதம நூலகர் பொது நூலகம், யாழ்ப்பாணம்), லாவண்யா(அவுஸ்திரேலியா), ரதிப்பிரியா(இலங்கை வங்கி, புன்னாலைக் கட்டுவன் கிளை) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவகரன்(இறைவரித் திணைக்களம் […]

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை

உயிரைப் பறிக்கும் வகையிலான கொடூரமான தாக்குதல்களை நடத்தும் பாலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று (30) நிறைவேற்றியுள்ளது. இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீவிர வலதுசாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பாதசாரி பேருந்தில் மோதி பலி

கேகாலை, மொலகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை – கொழும்பு வீதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன், வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த பாதசாரி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் மொலகொட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கேகாலை […]

இன்று முதல் ஒன்லைன் முறையில் சொத்து, பொறுப்பு விபரங்கள்

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக இன்று (31) முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு திறக்கப்படுவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினத்திலிருந்து சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இந்த மத்திய மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலதிக விபரங்களை வழங்கிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க: “2023ஆம் ஆண்டின் 9ஆம் […]

இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் சடலம் ஒன்று மீட்பு

இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாகச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.