அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அஜித் பி. பெரேரா

தரம் குறைந்த மருந்துப்பொருட்களை கொண்டுவந்த கெஹலிய ரம்புக்வெலவை பதவி விலகி செல்லுமாறு தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க, தனது அமைச்சரவையில் இருந்துகொண்டு தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவந்து நாட்டுக்கு கோடிக்கணக்கில் நட்டத்தை ஏற்படுத்திய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை பதவி நீக்க பின்வாங்கி வருகிறார். கெஹலிய செய்த தவறையே தற்போது குமார ஜயகொடி செய்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பிபெரேரா தெரிவித்தார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். […]
அப்பாவி ஏழை மக்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த அநுர குமார இன்று எங்கே?

இந்நாட்டின் அப்பாவி ஏழை மக்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று நாட்டில் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை (30) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அன்று எதிர்க்கட்சி […]
கனடாவிலும் எரிபொருள் வரிச் சலுகை வழங்கக் கோரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் உலகளாவிய மோதல்கள் மற்றும் பருவகால மாற்றங்களால் எரிவாயு விலைகள் உயர்ந்து வருவதால் கனடியர்கள் கடும் நிதி நெருக்கடியை உணர்கின்றனர். டொராண்டோ வில் ஹியூயன் என்பவர் சாதாரணமாக தனது சிறிய ரக காரில் எரிபொருள் நிரப்ப 50 டொலர் போதுமானதாக இருக்கும் என்று கூறுகிறார். ஆனால் திங்கள்கிழமை மதியம் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் அவர் எரிபொருள் நிரப்பியபோது அதற்கு 50 டொலருக்கும் அதிகமாக செலவானதாகவும் அது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார். “இது […]
காணாமல் போனோர் தொடர்பான விடயங்களில் சர்வதேச தலையீடுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!

காணாமல் போனோர் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதில் சர்வதேச அமைப்புகளின் எந்தவொரு தலையீட்டையும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிராகரித்துள்ளது. மேலும் தடயவியல் அதிகாரிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. மகேஷ் கட்டுலந்த பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தடயவியல் அதிகாரிகளுக்கான கோரிக்கைகளைத் தனது நிறுவனம் அனுப்பியுள்ளதாகக் கூறினார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தேவைகள் குறித்து மதிப்பீடு செய்ய ஐ.நா முன்வந்த போதிலும் தங்களின் இதர கோரிக்கைகளும் […]
கனடாவில் சமூக ஊடகத் தடை விதிக்கப்பட வேண்டுமா? புதிய கருத்துக்கணிப்பில் ஆதரவு

2024 நவம்பரில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையை விதித்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியதிலிருந்து கனடா மக்களும் தங்கள் நாட்டில் இதே போன்ற ஒரு சட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது. திங்களன்று வெளியிடப்பட்ட அங்கஸ் ரீட் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுத் தடை விதிப்பதை 75 சதவீத கனடா மக்களும் ஆதரிக்கின்றனர். குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களிடையே இந்த ஆதரவு 70 சதவீதமாக உள்ளது. மாகாண வாரியான ஆதரவு: இந்தத் […]
படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் அரசியலமைப்பு மூலமான தீர்வுக்காக அயராது உழைத்தவர் – எரிக் சொல்ஹெய்ம்

படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியதாகவும், போரை நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அயராது உழைத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தொடர்பில் பிரசன்னா சண்முகதாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள (Neelan: Unsilenced) எனும் ஆவணத்திரைப்படத்தைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டு, அதுபற்றி தனது […]
பெண்கள் மயக்க மருந்து கொடுத்து கொலை – கடத்தப்பட்டமை; தடுப்புக்காவலில் 7வது சந்தேகநபர்
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மயக்கமருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ஏழாவது சந்தேக நபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விசாரணை செய்வதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலிருந்து சென்ற கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொழும்பு,வத்தளை பகுதியில் வைத்து […]
தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

சமூகத்தை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார நன்மைகள் சமூகத்தில் சமமாகப் பகிரப்படுவதை உறுதி செய்வதற்கும் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது “சமூக சக்தி” வேலைத்திட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான தற்போதைய முன்னேற்றம், அதனுடன் தொடர்புடைய திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் 2027ஆம் […]
நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அரசியல் நோக்கத்துடன் மருத்துவர்களின் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய அளவில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்க உள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த போராட்டம் தொடர்பில் அறிவித்துள்ளது. எந்தவொரு விசாரணையும் இன்றி, சட்டவிரோதமாகவும் அரசியல் நோக்கத்துடனும் மருத்துவர்களின் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறோம் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சாமில் விஜேசிங்க […]
முதியவர் ஒருவரின் சடலம் சுரங்கக் குழியில் இருந்து மீட்பு!
இரத்தினபுரி – கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹவத்தக்கந்த பகுதியில் உள்ள சுரங்கக் குழி ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் காண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் லெந்தொர பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 28ஆம் திகதி ஒபநாயக்க பொலிஸ் பிரிவின் லெந்தொர பகுதியில் நபர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் ஓபநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளுக்கமைய குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் […]