புதிய அலை கலை வட்டத்தில் இணைய வாய்ப்பு

கடந்த 46ஆண்டு களாகத் தலைநகரிலே கலை, இலக்கிய மேம்பாட்டுக்காகச் செயல் பட்டு வரும் புதிய அலை கலை வட்டம், அதன் கட்டமைப்பாக பிரதமநிர்வாகம், இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் சமூக நல அமைப்பான நல உதயம் என்ற அணிகளை உள்ளடக்கிச் செயற்பட்டு வருகிறது. வருடாந்தம் பிரதம நிர்வாகம் உட்பட மற்றும் சகல அணிகளுக்கும் நிர்வாகிகள் தெரிவை நடத்துவதோடு இந்தப் பிரிவுகளுக்கான புதிய அங்கத்தவர்கள் இணைப்பையும் நடத்தி வருகின்றது. எனவே இதில் இணைந்து செயல்பட விரும்பும் புதியவர்களுக்கு […]
வறட்சியான வானிலை

நாடு முழுவதிலும் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் வதுளை மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் […]
பாரிய நெருக்கடியில் உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறை

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கியுள்ள இராணுவ நிலைமை தீவிரமடைந்து வருவதால், உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறை கடுமையான நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. துபாய், தோஹா மற்றும் அபுதாபி உள்ளிட்ட மத்திய கிழக்கின் முக்கிய விமான மையங்கள் மூடப்பட்டதன் காரணமாக பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தங்கள் விமான அட்டவணைகளை கணிசமாக மாற்றியமைத்த அல்லது ரத்து செய்த சில முக்கிய விமான நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஏயர் கனடா: டெல் அவிவ் […]
இரண்டாவது வழிகாட்டல் அறிவுறுத்தல்களை அரசாங்கம் வெளியிட்டது!

மின்சாரம் மற்றும் வலுசக்தியை முகாமைத்துவம் செய்யும் பொருட்டு மாலை 3 மணிக்கு பின்னர் அரச நிறுவனங்களில் சகல குளிரூட்டி சாதனங்களையும், மாலை 06 -10 மணிவரையான காலப்பகுதியில் வீதி விளக்குகளை அணைத்தல் வேண்டும் என பல அறிவுறுத்தல்களை முன்வைத்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் இரண்டாவது வழிகாட்டல் அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தியின் கையொப்பத்துடன் குறித்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டல் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் […]
இலங்கையின் பெரும்பாகப்பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் கிளை அமைப்புகள்

இலங்கை உள்ளடங்கலாக இயற்கை அனர்த்தங்களினால் மிகமோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளால் பெறப்படும் கடன்கள் அந்நாடுகளின் பெரும்பாகப்பொருளாதாரத்தை மிகமோசமானப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகள், எனவே அவ்வழுத்தங்களைக் குறைப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர். ‘தித்வா’ சூறாவளியை அடுத்து இலங்கைக்கு ஏற்பட்ட தாக்கங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா மற்றும் ஐக்கிய […]