மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்ட பெண்ணின் நேரடி வாக்குமூலம்

மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பிய பெண் தனது அனுபவத்தை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது,

சம்பவ தினத்தில் காலை 10.30 மணியளவில் வவுணதீவு சந்தியில் தனது குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தபோது, ஒரு முச்சக்கர வண்டி வந்ததாகவும், அதில் ஏறுமாறு சாரதி கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பணம் இல்லையென கூறியபோது 100 ரூபா எனக் கூறியதால், அவர் குழந்தையுடன் முச்சக்கர வண்டியில் ஏறியதாகவும், அங்கு மற்றொரு வயோதிபப் பெண்ணும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர், முச்சக்கர வண்டியில் பயணம் செய்தபோது, அந்த வயோதிபப் பெண் மட்டு. போதனா வைத்தியசாலையில் இறங்கியதாகவும், அதன் பின்னர் தன்னை புடவைக்கடை வீதியில் இறக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது முச்சக்கர வண்டியில் இருந்த மற்றொரு பெண், “சாரி எடுக்க போகிறேன், ஆட்டோவில் வருங்கள்” என கூறியதாகவும், அதன்படி அவர் நகைக் கடைக்கு சென்று தங்க மோதிரத்தை மீட்டுக் கொண்டு மீண்டும் அந்த இடத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர், அந்தப் பெண் மற்றொருவருடன் தொலைபேசியில் பேசி, மணிக்கூட்டு கோபுரம் பகுதிக்கு வருமாறு கூறியதாகவும், அங்கு மீண்டும் முச்சக்கர வண்டியில் ஏறியதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின் பொதுச்சந்தை வீதி வழியாகச் சென்று, சிறிது நேரம் நிறுத்தி, பின்னர் பிரதான பஸ் தரிப்பு நிலையம் வழியாக வவுணதீவு நோக்கி பயணித்ததாகவும் கூறியுள்ளார்.

வலையிறவு பாலம் அருகே செல்லும் போது, அந்தப் பெண் தனக்கும் தனது குழந்தைக்கும் பச்சை நிற ஜூஸ் கொடுத்து, தமக்கு விளாம்பழ ஜூஸ் கொடுத்ததாகவும், அதை குடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கியதாகவும், அதன் பின்னர் ஒரு இளைஞன் கத்தி உடன் முச்சக்கர வண்டியில் ஏறியதாகவும் கூறியுள்ளார்.

அதன்பின்னர் பயணம் தொடர்ந்தபோது, தாம் திடீரென மயக்கமடைந்ததாகவும், அதன் பின்னர் நீரில் மூழ்கிய நிலையில் விழித்ததாகவும், கிணற்றில் இருந்து கயிறு மூலம் யாரோ தன்னை மீட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பலமுறை மூழ்கி மீண்டபோது “அம்மா” என்று கத்தி உதவி கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (31) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பெண்களுக்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை

Gamini

கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

April 17, 2026

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

iran

கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

April 17, 2026

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான

srines

இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

April 17, 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்

kap

ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்