ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 17) நிராகரித்துள்ளது.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பிலான சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளை ஆய்வு செய்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த உயர்மட்ட ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்வதால், கபில சந்திரசேனவை எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.