பெர்த்தில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: இலங்கை மருத்துவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், அக்குபஞ்சர் (Acupuncture) சிகிச்சையின் போது பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொது மருத்துவ பயிற்சியாளரான (General Practitioner) வினோ காரியகரவன (49) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த இவர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளில் இரண்டு கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய ஒரு சட்டவிரோத மற்றும் அநாகரிகமான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் பெர்த் நீதிபதி நீதிமன்றம் (Perth Magistrates Court) இவரை செவ்வாய்க்கிழமை குற்றவாளி என அறிவித்தது.

பின்னணி:

கடந்த ஆண்டு ஜூலை மாதம், முதுகுவலியால் பாதிக்கப்பட்ட 30 வயதுடைய சர்வதேச மாணவி ஒருவர், கார்லைல் மருத்துவ மையத்திற்கு (Carlisle Medical Centre) சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அவருக்கு தசைப்பிடிப்பு இருப்பதாகக் கூறி மறுநாள் அக்குபஞ்சர் சிகிச்சைக்காக மருத்துவர் காரியகரவன வரவழைத்துள்ளார்.

சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்தச் சிகிச்சையின் போது, அந்தப் பெண்ணிடம் மருத்துவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதோடு, அவரது பாலியல் வாழ்க்கை குறித்த கேள்விகளைக் கேட்டு அநாகரிகமாகத் தொட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

போலியான கருத்துப் படிவம்:

சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் காரியகரவன ஒரு போலியான கருத்துப் படிவத்தை (Feedback Form) கணினியில் தயாரித்து அச்சிட்டுள்ளார். அதில், “இந்தச் சிகிச்சை முறை மிகவும் தொழில்முறையாக (Professional) செய்யப்பட்டது, இச்சிகிச்சையில் நான் திருப்தி அடைகிறேன்” என்று எழுதி, அந்தப் பெண்ணிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு:

மருத்துவரின் தரப்பு வழக்கறிஞர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இது ஒரு தற்செயலான தொடுதல் என்று வாதிட்டார்.

எனினும், இதனை நிராகரித்த நீதிபதி பெலிண்டா கோல்மேன் (Magistrate Belinda Coleman), மருத்துவர் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண் இதற்குச் சம்மதிக்கவில்லை என்பதும், சிகிச்சையின் போது அவரது பாலியல் வரலாறு குறித்துக் கேட்பதற்கு எந்தவொரு மருத்துவக் காரணமும் இல்லை என்பதும், தனது குற்றத்தை மூடிமறைக்கவே மருத்துவர் அந்தப் போலியான படிவத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார் என்பதும் நீதிபதியால் உறுதி செய்யப்பட்டது.

தற்போது ஆஸ்திரேலிய சுகாதாரப் பயிற்சியாளர் ஒழுங்குமுறை முகமையின் (AHPRA) பதிவின்படி, இவர் இன்னும் ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவராகவே நீடிக்கிறார். இருப்பினும், அவரது இணையப் பக்கத்தில் அவர் தற்சமயம் “ஆண் நோயாளிகளை மட்டுமே” பரிசோதிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.