முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் பிணையில் விடுதலை

ஒரு வருட காலப்பகுதிக்குள் 24 கோடி ரூபாவிற்கும் அதிக முறையற்ற சொத்துக்களை ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அசாங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான முன்னாள் எம்.பி யை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவருக்கு வெளிநாடு செல்லத் தடையும் விதித்து கட்டளையிட்டார்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலக்க முன்வைத்த விடயங்களை ஆராய்ந்தே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கு சந்தேகநபர் ஒத்துழைப்பு வழங்குவதையும், அவரது மகள் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்குத் தோற்றவுள்ளமையையும் ஒரு விசேட காரணியாக கருதி பிணை வழங்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.

சந்தேகநபர் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் 27 முறை தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டமை மற்றும் தனது வருமானத்திற்கு அப்பாற்பட்ட வகையில் 24,38,50,942 ரூபாயை செலவிட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது

litr

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் – லிட்ரோ

April 17, 2026

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை

Gamini

கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

April 17, 2026

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

iran

கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

April 17, 2026

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான

srines

இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

April 17, 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்

kap

ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன