2026 ஆம் ஆண்டுக்குரிய வட மாகாண ஆசிரியர் இடமாற்றம் முழுமையடையவில்லை

2026 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரியர் இடமாற்றங்கள் வட மாகாணத்தில் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் அருள்வதனன் டினோசன் தெரிவித்துள்ளார்.

சேவையின் தேவையை முன்னிட்டு இடமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தேசிய மட்ட இடமாற்றங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் காரணம் உண்மைக்கு புறம்பானதாகவும் தவறானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வழமையாக ஆசிரியர் இடமாற்றங்கள் ஆண்டின் தொடக்கத்தில், குறிப்பாக ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வர வேண்டும் என்றாலும், இவ்வாண்டு அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

சில பாடசாலைகளில் பதிலீட்டு ஆசிரியர்கள் இருந்தபோதிலும், இடமாற்றம் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படாத நிலை தொடர்கிறது.

குறிப்பாக வன்னி போன்ற கடின சேவைப் பகுதிகளில் 9 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் கூட இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் காரணமாக ஆசிரியர்களின் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளன.

இதற்கு மாறாக ஆசிரியர்களின் சம்பளங்களில் எந்த உயர்வும் இல்லாததால் அவர்கள் கூடுதல் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

மேலும், திட்டமிட்ட முறையற்ற இடமாற்றங்களால் சில ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளுடன் இடமாற்றம் எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் பல ஆசிரியர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, உரிய காலக்கட்டத்தில், நியாயமான முறையில் ஆசிரியர் இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தாழ்மையுடன் கோருகிறது என்றார் அவர்.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்