2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியீடு!

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இன்று வியாழக்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில், இலங்கை உலகளவில் குறைந்தளவான மகிழ்ச்சியுடைய நாடாக 134 ஆவது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளது.

மொத்தம் 147 நாடுகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இலங்கை 4.0 புள்ளிகளைப் பெற்று 134 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு 133 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது ஒரு இடம் பின்வாங்கியுள்ளதுடன் எத்தியோப்பியாவுடன் ஒரே நிலையில் காணப்படுகிறது.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா (116), பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கையை விட அதிக மகிழ்ச்சியான நாடுகளாகத் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அறிக்கையின் விசேட அம்சமாக, இளைஞர்களின் மனநலத்தில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடே முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வழமை போன்று இம்முறையும் நோர்டிக் (Nordic) நாடுகளே பட்டியலின் முன்னணியில் உள்ளன:

01.பின்லாந்து தொடர்ச்சியாக 9 ஆவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

02.ஐஸ்லாந்து

03.டென்மார்க்

04.கொஸ்டாரிகா லத்தீன் அமெரிக்க நாடொன்று இப்பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கையில் நிலவும் பொருளாதாரச் சவால்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் சமூக அமைதியின்மை போன்ற காரணிகளே நாட்டு மக்களின் வாழ்க்கை திருப்தி குறைவடைந்தமைக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

அதேநேரம், போர்ச் சூழலில் உள்ள ஆப்கானிஸ்தான் இப்பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்