2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியீடு!

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இன்று வியாழக்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில், இலங்கை உலகளவில் குறைந்தளவான மகிழ்ச்சியுடைய நாடாக 134 ஆவது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 147 நாடுகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இலங்கை 4.0 புள்ளிகளைப் பெற்று 134 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு 133 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது ஒரு இடம் பின்வாங்கியுள்ளதுடன் எத்தியோப்பியாவுடன் ஒரே நிலையில் […]

இந்தியாவில் இலங்கை உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான ஆளுமை விருத்தித் திட்டம்

இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் படி, இலங்கை தமிழ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 30 பேரைக் கொண்ட இரண்டாவது குழு, இந்தியாவில் நடைபெற்ற 10 நாள் ஆளுமை விருத்தி செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இந்த பயிற்சி திட்டம் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் (NIRDPR), ஹைதராபாத்தில் நடைபெற்று, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மார்ச் 9 முதல் […]

ஈரானிய கால்பந்து வீராங்கனைகள் நாடு திரும்பினர்

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொண்ட ஈரானிய தேசிய மகளிர் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள், அணியின் ஏனைய உறுப்பினர்களுடன் மீண்டும் ஈரானுக்குத் திரும்பியுள்ளனர். மலேசியா மற்றும் ஓமான் ஊடாகப் பயணித்த அவர்கள், நேற்று (18) பிற்பகல் துருக்கியிலிருந்து ஈரான் எல்லைக்குள் நுழைந்தபோது விளையாட்டு உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆசியக் கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்டியின் போது, ஈரானிய தேசிய கீதத்தின் போது மௌனம் காத்தமைக்காகத் தங்களுக்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், […]

மதுபானசாலையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

ஹாவாஎலிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உணவக முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 14ஆம் திகதி, ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய அன்பழகன் என்பவர், அப்பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றிற்கு உணவு வாங்கச் சென்றுள்ளார். இதன்போது, அவருக்கும் உணவக முகாமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக […]

கனேடிய தேசிய நிதி அறிக்கை சிறப்புத் துறையில் பிராம்ப்டன் நகரத்துக்கு விருது

பிராம்ப்டன், ஒன்டாரியோ (மார்ச் 18, 2026) – பிராம்ப்டன் நகரம், அரசு நிதி அலுவலர்கள் சங்கம் (GFOA) வழங்கும் கனடிய நிதி அறிக்கை விருதை (CAnFR) தொடர்ந்து 24வது ஆண்டாக பெற்றுள்ளது. இந்த விருது, கனடா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நகராட்சிகளின் நிதி அறிக்கையிடலில் சிறப்பை குறித்து நிற்கின்றது. இந்த அங்கீகாரம், நகரத்தின் 2024 ஆண்டிற்கான ஆண்டு நிதி அறிக்கையையும், அரசு கணக்கியல் மற்றும் நிதி அறிக்கையிடலில் உயர்ந்த தரநிலைகளை பின்பற்றும் அதன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. […]

பெர்த் மற்றும் வெல்லிங்டன் மாவட்ட உட்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் மேம்படுத்த ஒன்டாரியோ அரசு சுமார் $29 மில்லியன் முதலீடு

ஒன்டாரியோ அரசு, பெர்த் மற்றும் வெல்லிங்டன் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற நீர்வழங்கல் உட்கட்டமைப்புகளை விரிவுபடுத்தவும் புதுப்பிக்கவும் சுமார் $29 மில்லியன் முதலீடு செய்கிறது. இந்த நிதி, மியூனிசிபல் ஹவுசிங் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் புரோகிராம் (Municipal Housing Infrastructure Program) இன் ஹெல்த் அண்ட் சேப்டி வாட்டர் ஸ்ட்ரீம் (MHIP-HSWS) கீழ் வழங்கப்படும் மொத்த $875 மில்லியன் முதலீட்டின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதுகாக்கப்படுவதுடன், புதிய வீட்டு வசதிகள் உருவாக, தொழிலாளர்கள் தொடர்ந்து பணியில் […]

சாணக்கியன் தனக்கு எதிரான உண்மைகளை ஊடகங்கள் வெளிப்படுத்தினால் அவற்றை நசுக்க முயற்சிப்பவர் – அந்தனிசில் ராஜ்குமார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் அச்சுறுத்தப்பட்டனர். அதேபோன்றதொரு அடக்குமுறைச் சட்டத்தையே, அந்த அரசியல் பின்னணியில் இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று தமிழ் இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றார் என ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஊடக […]

பனங்காடு பால ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், கோளாவில்-02 பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸாரினால் கடந்த புதன்கிழமை (18) மீட்கப்பட்ட இந்தச் சடலம் தொடர்பாக, அவரைத் தேடிவந்த குடும்பத்தினர் ஊடகங்கள் வாயிலாகத் தகவலறிந்து நேரில் சென்று அடையாளம் காட்டியுள்ளனர். உயிரிழந்தவரின் மனைவி ஒரு மாதத்திற்கு முன்னரே […]

அறிவுறுத்தல்களை மீறினால் கடும் சிக்கல்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 0112106767, 0117296130 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு முறைகேடுகள் தொடர்பான தகவல்களை அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

சீனப் பெண்கள் இருவர் 38,000 சிகரெட்டுகளுடன் கைது

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு சீன நாட்டு பெண் வர்த்தகர்கள் இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வியாழக்கிழமை (19) அதிகாலை 12:30 மணியளவில் சீனாவின் செங்டூ (Chengdu) நகரிலிருந்து ‘எயார் சைனா’ நிறுவனத்திற்குச் சொந்தமான CA-425 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்தனர். விமான நிலையத்தின் “பசுமை […]