உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு?

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் இம் மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த உத்தேச விலை உயர்விற்கு பிரதான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் மீது குற்றச்சாட்டு

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமது அத்தியாவசியத் தேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்க முற்படும்போது அவர் பதிலளிக்க மறுப்பது குறித்துப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள், தமக்குரிய இழப்பீடுகள் முறையாகக் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில்: “வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எமது விபரங்களைக் கிராம உத்தியோகத்தர்கள் சரியாக […]

விசாரணை என்ற பெயரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதை செய்யாதீர்கள்!

விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் மீது முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (19) பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ‘கறுப்புக் கொடி’ ஏந்திய போராட்டம் தொடர்பாக, யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CID) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். புதிய ஆட்சியின் கீழும் […]

விரைவில் க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி, க.பொ.த உயர் தரப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், க.பொ.த சாதாரண தர விடைத் தாள்கள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள், ஏற்கெனவே ஆரம்பித்து விட்டதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சாதாரண பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் […]

கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானியின் மரணத்திற்குப் பழிவாங்குவோம் – முஜ்தபா கமேனி

இஸ்‌ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானியின் மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என்று ஈரானின் புதிய அதியுயர் தலைவர் முஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். லாரிஜானியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வமான செய்தியில், “சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு, இந்த தியாகிகளைக் கொன்ற குற்றவாளிகள் விரைவில் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி […]

திருமதி கலாவதி அரிராஜசிங்கம்

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட கலாவதி அரிராஜசிங்கம் அவர்கள் 16-03-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கற்பகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அரிராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், அருன், அபர்னா(அபி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், இரஞ்சிதமலர், இரவீந்திரன், மோகன், தயாவதி, பிறேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயராசா, புவனேஸ்வரி, அனுசியா, சிறிதரன், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். பார்வைக்கு Sunday, 22 Mar 2026 9:00 […]

தரமற்ற நிலக்கரிப் பயன்பாடு; நுரைச்சோலை மின் உற்பத்தி வீழ்ச்சி?

தரமற்ற நிலக்கரி பயன்பாடு காரணமாக நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சைக்குரிய பின்னணியில், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைவடைந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த பொருளாதார குறிகாட்டி அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த மார்ச் 03 ஆம் திகதி நிலக்கரி எரிப்பு மூலம் 34.2 ஜிகாவோட் (GW) மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. எனினும், நேற்று அந்த அளவு 26.2 ஜிகாவோட் ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. நிலக்கரி […]

ஒற்றை இரட்டை எண்களுக்கு அமைய எரிபொருள் விநியோகம்

QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை ​பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி […]

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்?

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம், இன்று (19) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் குமார ஜயகொடி தற்போதைய அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்னர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கமைய, இன்று காலை குறித்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். இதேவேளை, உலகில் […]

கச்சா எண்ணெய் விலை 110 டொலராக உயர்வு

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகிலுள்ள ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை கடந்த செவ்வாய்க்கிழமை நிலவிய விலையை விட 5% க்கும் அதிகமாக உயர்ந்து, 109.91 டொலர்களாக பதிவாகியுள்ளது. இருப்பினும், சிறிது நேரத்தின் பின்னர் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டது. அதேவேளை, பிரித்தானியாவின் […]