பனங்காடு பால ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், கோளாவில்-02 பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸாரினால் கடந்த புதன்கிழமை (18) மீட்கப்பட்ட இந்தச் சடலம் தொடர்பாக, அவரைத் தேடிவந்த குடும்பத்தினர் ஊடகங்கள் வாயிலாகத் தகவலறிந்து நேரில் சென்று அடையாளம் காட்டியுள்ளனர். உயிரிழந்தவரின் மனைவி ஒரு மாதத்திற்கு முன்னரே காலமான நிலையில், அவர் தனது உறவினர்களின் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் சடலத்தைப் பார்வையிட்டனர். அம்பாறை தடயவியல் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகள் நிறைவுற்றன. பின்னர், நல்லடக்கத்திற்காக புதன்கிழமை (18) அன்று உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னைய செய்திப் பின்னணி

முன்னதாக, பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் ஆணின் சடலமொன்று மிதப்பதைக் கண்ட மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமும், 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கதுமான அந்தச் சடலம் ஓரளவு சிதைந்த நிலையில் காணப்பட்டது. இது கொலையா, தற்கொலையா அல்லது முதலையின் தாக்குதலா என்ற கோணத்தில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். ஆரம்பத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான புகார்கள் ஏதும் கிடைக்காத நிலையில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,