சென்னை:
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு அறிவித்த “200 யூனிட் இலவச மின்சாரம்” திட்டம் குறித்து நிலவி வந்த குழப்பங்களுக்குத் தமிழக மின்சாரத் துறை தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மின்சாரத் துறை செயலர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். ஒருவேளை மின்சாரப் பயன்பாடு 500 யூனிட்டுகளைத் தாண்டினால், தற்போது நடைமுறையில் இருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரச் சலுகை தொடர்ந்து நீடிக்கும். இதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்குப் பெரிய அளவிலான மின் கட்டணச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,730 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்றாலும், மக்களின் நலன் கருதி அதனை அரசே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சுமார் 2.2 கோடி குடும்பங்கள் இந்த புதிய அறிவிப்பால் நேரடியாகப் பயனடைய உள்ளனர். முதல்வர் விஜய் பதவியேற்ற உடனே கையெழுத்திட்ட இந்தத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகியுள்ளது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
#FreeElectricity #200UnitsFree #VijayAsCM #TVK #BreakingNews #May11 #TamilNaduPolitics #TNEB #ElectricityBoard #ThalapathyVijay #NewGovernmentTN #100UnitsFreeContinue #PeoplesWelfare #Budget2026 #VijayInFort #StalinVsVijay #ElectionResults2026 #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Announcement_“`