சென்னை:
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கத் தவெக போராடி வரும் சூழலில், அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் எவ்வித ஆசைக்கும் இணங்கிவிடக் கூடாது எனப் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மிகக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பனையூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், குதிரை பேர முயற்சிகளை முறியடிக்க வேண்டும் எனத் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய என்.ஆனந்த், “யாராவது உங்கள் முன்பு 10 கோடி ரூபாயை வைத்துப் பேரம் பேசினாலும், அதற்கு மயங்கி விடாதீர்கள். ஒரு நிமிடம் நம் தலைவர் விஜய்யின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ளுங்கள். விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் நமக்கு ஆதரவு அளிப்பார்கள்; நல்ல முடிவு வரும் வரை அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்” என்று உருக்கமாகப் பேசினார். இதற்கிடையே, ஆளுநரின் நிபந்தனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்துச் சட்ட வல்லுநர்களுடன் விஜய் ஆலோசித்து வருகிறார். விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் இன்று தங்கள் இறுதி முடிவை அறிவிக்க உள்ளதால், தமிழக அரசியலில் இன்று ஒரு திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தவெக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
#BussyAnand #Vijay #TVK #MLAMeeting #HorseTrading #BreakingNews #May8 #TamilNaduPolitics #Loyalty #ThalapathyVijay #VijayAsCM #MajorityTest #VCK #CPI #CPIM #StalinVsVijay #ElectionResults2026 #NewGovernmentTN #Panaiyur #PoliticalIntegrity #VijayMakkalIyakkam_“`