சென்னை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற ‘நல்வாழ்வு தூதர்கள்’ நியமன விழாவில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், இன்னும் 10 நாட்களில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் விடுதிகள்:
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், மாணவர்களின் நலனுக்காக அரசு திட்டமிட்டுள்ள பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். அப்போது, மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பிலான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கொள்கை அளவில் தயாராக உள்ளதாகவும், மேலும் ரூ.3,000 கோடி மதிப்பில் 200 ஒருங்கிணைந்த விடுதி வளாகங்கள் தனியார் பங்களிப்போடு கட்டப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“10 நாட்கள் காத்திருங்கள் – முதல்வர் வெளியிடுவார்”:
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், “மாணவர்களுக்கு நிச்சயமாக இலவச மடிக்கணினி வழங்கப்படத்தான் போகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட விலையைக் காட்டிலும் தற்போது மடிக்கணினியின் விலை சற்று அதிகரித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன மடிக்கணினிகளை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம். இன்னும் 10 நாட்கள் மட்டும் காத்திருந்தால், இது தொடர்பான மிக முக்கியமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடுவார்,” என்று உறுதியளித்தார்.
செல்போன் மோகத்திற்கு எதிராக அமைச்சரின் அறிவுரை:
முன்னதாக விழாவில் மாணவர்களிடையே பேசிய அவர், “நான் ஒரு அமைச்சராக அல்லாமல் உங்களில் ஒரு அண்ணனாகக் கேட்டுக் கொள்கிறேன். 24 மணி நேரமும் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடக்காதீர்கள். போனை ஒதுக்கி வைத்துவிட்டு பெற்றோருடன் பேசுங்கள், ஆரோக்கியமாகச் சாப்பிடுங்கள், பெற்றோருடனும் ஆசிரியர்களுடனும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்,” என அன்பான அறிவுரைகளை வழங்கினார்.
#MinisterViswanathan #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #HigherEducation #FreeLaptops #MOPVaishnavCollege #StudentWelfare #NEET #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates