ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுவதை பிரதிநிதியமைச்சர் அனில்ஜயந்த பெர்ணான்டோ நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
ஜிஎஸ்பி வரி;ச்சலுகை 2028 டிசம்பர் 31ம் திகதி வரை நடைமுறையிலிருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகளின் படி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டிய சர்வதேச உடன்படிக்கைகள் 32 ஆக அதிகரித்துள்ளது ஆனாலும் அரசாங்கம் இந்த வர்த்தக சலுகை மூலம் தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய சந்தை அணுகலை பெற்றுவருகின்றது.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் கீழ் முன்னுரிமை சந்தை அணுகல் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள குழுவொன்றை நியமித்துள்ளோம் என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.