ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கத்திடம் தனது இரண்டு வருட பதவிக்காலத்தின் சாதனை என மக்களுக்கு காண்பிப்பதற்கு எதுவுமில்லை என பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்
செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
ஜனாதிபதி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொய்களை சொல்லிவருகின்றார்.
கடந்த இரண்டு வருட சாதனை என மக்களுக்கு காண்பிப்பதற்கு அரசாங்கத்திடம் எதுவுமில்லை.
ஜனாதிபதி தனது கடந்தகால வாக்குறுதிகளை கைவிட்டுவிட்டு,தற்போது புதிய வாக்குறுதிகளை வழங்கிவருகின்றார்.அரசாங்கம் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதை கைவிடவேண்டும்.
பணவீக்கம் அதிகரித்துள்ளது, பொருளாதார வளர்ச்சி வீதம் வீழச்சியடைந்துள்ளது.
(ரி)