திலீபன் சிலை திறப்பு நிகழ்வில் மாணவர்களை பங்கேற்கச் செய்தமை குறித்து விசாரணை?

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திலீபனின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களைப் பங்கேற்கச் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசூரியவிடம் தேசிய ஆசிரியர் இயக்கத்தினால் திங்கட்கிழமை (21) முறைப்பாட்டுக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதற்காக தேசிய ஆசிரியர் இயக்கத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (21) பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே […]

இலங்கைக்கான ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2026 பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்

இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சித் திட்டங்களின் தொடரை ஆரம்பித்து வைக்கும் வகையில், அதன் தொடக்கப் பயிற்சி நெறி திங்கட்கிழமை (21) திருகோணமலை சிறப்புப் படகுப் படைப் பயிற்சிப் பள்ளியில் ஆரம்பமானது. கடல்சார் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் திறன்களை வலுப்படுத்துவது இந்தப் பயிற்சித் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும். அத்துடன், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவியல் நீதி முறைமையின் ஊடாக […]

தியாக தீபம் திலீபன் நினைவாக சித்திரப் போட்டிகள்

​அடுத்தடுத்த சந்ததிகளுக்கு எமது வரலாற்றைக் கடத்தும் முகமாக தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைப் போற்றி நடாத்தப்படும் சித்திரப் போட்டி…

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடலாம்!

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாலேயே தனது 87 வயதான தாயாருடன் இணைந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள விரும்பியதாகவும், அதற்காக ஒரு நாயக்க தேரரிடம் தமக்கும் தமது தாயாருக்கும் ஒன்றாக ஆசீர்வாதம் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தனது புதிய ஆய்வு நூலான 9.05 – விக்ருதிய: இலங்கையை உலுக்கிய கருத்தியல் என்ற நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இவ் விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு […]