07- 10ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது.

சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டன.

பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ள புதன்கிழமை தவிர பாராளுமன்றம் கூடும் ஏனைய சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை (188ஆம் அத்தியாயம்) தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2482/03 மற்றும் 2482/04 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மு.ப 11.30 மணி முதல் பி.ப 3.30 மணிவரை கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் 2468/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி, (235ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், (203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2480/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04 மற்றும் 2479/38 ஆகிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள் என்பவற்றுக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர் பி.ப 3.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் வெளிநாட்டிற்குப் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை பற்றிய விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 09ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பணம் தூய்தாக்கதல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒழுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் என்பவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன.

8

கோவையில் செமி கண்டெக்டர் பூங்கா வருவது நிச்சயம் – அமைச்சர் கீர்த்தனா உறுதி

July 3, 2026

கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்னிந்திய மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கோவையின் தொழில் வளர்ச்சிக்கான

7

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விலகல்

July 3, 2026

சென்னை: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்

peel poli

‘பாரிய’ சில்லறை விற்பனைத் திருட்டு விசாரணை குறித்த விபரங்களை வெளியிடவுள்ள பீல் பொலிஸார்

July 3, 2026

பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) வெள்ளிக்கிழமை காலை ஸ்கொயர் ஒன் மால் (Square One Mall) வணிக

6_dmk-mla-anitha-radhakrishnan-arrested-political-reactions-03-07-2026

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது; மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கண்டனம்

July 3, 2026

ஆத்தூர்: முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தி.மு.க.

5

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி: கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

July 3, 2026

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டமிட்ட சதி நடைபெற்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள்

easter bomb

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு

July 3, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் வழக்குகளில் இருந்து ஆரம்பத்திலேயே தங்களை விடுவிக்குமாறு முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப்

wasantha kara

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு பிணை

July 3, 2026

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு இன்று

court-judge-hammer-gavel-696x398

ரகித, சரித, அருண மூவருக்கும் விளக்கமறியல்!

July 3, 2026

ஹரக் கட்டா தரப்பிடமிருந்து 1200 இலட்சம் ரூபா இலஞ்சம் முற்பணமாக பெற்றதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நீதியமைச்சர்

sumanth

வவுனியா முன்னாள் முதல்வரின் பதவிநீக்கம் தொடர்பான வடக்கு ஆளுநரின் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

July 3, 2026

வவுனியா மாநகர முன்னாள் முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 15

737494258_122205306176574891_7579757557796874545_n

தமிழ்தேசிய பேரவை தமிழக முதல்வர் சந்திப்பு

July 3, 2026

தமிழ்தேசிய பேரவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

Parliame

07- 10ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வு

July 3, 2026

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி

Dengue

57000 ஐ கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

July 3, 2026

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,000 ஐத் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.