ஷிரான் பாஸிக்கிற்கு மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல்!

முக்கியப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகம் (CCIB) மேலும் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளது.

இலங்கையுடன் தொடர்புடைய பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் ஷிரான் பாஸிக், கடந்த மார்ச் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு (BIA) வந்தடைந்ததும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் அவர் காவலில் எடுக்கப்பட்டார்.

அவரது ஆரம்பக் கைதுக்குப் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபரிடம் விசாரணை நடத்துவதற்காக 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவைப் பெற்றுக்கொண்டதுடன், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக அவரை மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்ற விசாரணைப் பணியகம் அனுமதியை பெற்றுள்ளது.

ஆரம்பகால விசாரணைகளின் போது, துபாயில் உள்ள ஒரு சொகுசு வணிக வளாகத்துக்கு சென்றிருந்தபோது துபாய் காவல்துறையினரால் தான் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டதாக ஷிரான் பாஸிக் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகளால் அவரது கைபேசி பரிசோதிக்கப்பட்டதாகவும், அதில் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் வீடியோ காட்சிகள் சேமிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்ததை அடுத்து அவர்கள் தன்னைச் கைது செய்ததாகவும் அவர் கூறினார்.

ஈரானுடன் இணைந்திருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்து துபாய் அதிகாரிகள் தம்மிடம் கேள்வி எழுப்பியதாகவும், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கு முன்பு இலங்கைக்குச் செல்வதற்கு தனக்கான விமான டிக்கெட்டைத் தானே விலைக்கு வாங்குமாறு தமக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஷிரான் பாஸிக்கிற்கு எதிராக முன்னர் வெளியிடப்பட்ட இன்டர்போல் சிவப்பு அறிக்கை (Red Notice) திரும்பப் பெறப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், இலங்கை அதிகாரிகள் அவருக்கு எதிராக புதிய சிவப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்காகத் தயாராகி வந்த வேளையில் அவர் துபாயில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் தகவல்களின்படி, ஷிரான் பாஸிக் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி சட்டப்பூர்வமாக இலங்கையிலிருந்து துபாய்க்குச் சென்றிருந்தார்.

அவர் துபாயில் இரண்டு வணிகங்களை நடத்திக்கொண்டே ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகப் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

அவர் நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் மற்றும் பிற குற்றச் செயல்களில் அவரது ஈடுபாடு குறித்த மேலதிக விசாரணைகளை இலங்கைச் சட்ட அமுலாக்க அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

dougq

அந்தரங்கப் படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் பாதிக்கப்படுவோருக்குப் பாதுகாப்பளிக்க ஒன்ராறியோவில் புதிய சட்டம் அறிமுகம்

November 17, 2026

சம்மதமின்றி அந்தரங்கப் படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிட்டுத் துன்புறுத்தப்படுவதால் பாதிக்கப்படுவோருக்குப் பாதுகாப்பளிக்கும் வகையிலும், அத்தகைய படங்களை இணையத்தளங்களில் இருந்து

par

தமிழ்த் தேசியத்தின் மூத்த அரசியல்வாதி சிவாஜிலிங்கத்திற்கு சபையில் அஞ்சலி

November 17, 2026

தமிழ்த் தேசியத்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்

hari

வங்கக்கடலில் அக்வான் புயல்

November 17, 2026

வங்கக் கடலில் அக்வான் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் தற்போது புயலாக மாறியுள்ளது

2027

2027ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் தமிழ் பிரதேச செயலகங்களின் பங்கு?

November 17, 2026

“2027ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கென 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

oli

ஒலிம்பிக் எப்போது நடந்தாலும் அறிவிக்கப்பட்ட பரிசை வழங்குவது உறுதி

November 17, 2026

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் ஆண்டு எதுவாக இருந்தாலும், அறிவிக்கப்பட்ட நிதிப் பரிசை அவ்வாறே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என

1688202098-EARTHQUAKE-6

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

November 17, 2026

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக

arrest-1

போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

November 16, 2026

கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப்

maha

ஞானசார தேரருக்கு மீண்டும் காவியை அணிவிக்க வேண்டும்!

November 16, 2026

காவி நீக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் விதிகளுக்குட்பட்டு காவி ஆடையை அணிவிப்பதற்காக, கோட்டை ஸ்ரீ கல்யாணி சமாகிரிதர்ம மகா

death

கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

November 16, 2026

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்று (15) இரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட

MediaFile_20261116_124239_035

திட்டமிடப்பட்டிருந்த ஈரான் மீதான தாக்குதல் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு – டொனால்ட் டிரம்ப்

November 16, 2026

இணையம் சார்ந்த மோசடிகளை முறியடிப்பதற்காகவும், நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்காகவும் இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான தனது ஒத்துழைப்பினை அமெரிக்கா

trump carney 1

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றாலும், ட்ரம்பின் இறக்குமதி வரிகளை நீக்குவது கடினம்

November 16, 2026

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி (Democrats) காங்கிரஸின் இரு சபைகளிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றிய போதிலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

BH6GQRE6F5DIVMLNX5XJDLVMQA

டொராண்டோவிலுள்ள சீனத் தூதரகம் எதிரே ஃபலூன் கோங் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்

November 16, 2026

கனடாவின் டொராண்டோவிலுள்ள சீனத் தூதரகத்திற்கு வெளியே ஃபலூன் கோங் (Falun Gong) அமைப்பினர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம்