2027 வரவு செலவுத் திட்டம் : பல்வேறு தொழிற்சங்கத்தினர் நாளை எதிர்ப்பு போராட்டம்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் தமது துறைக்கான மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டி பல்வேறு தொழிற்சங்கத்தினர் இவ்வாரம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் தமது துறை புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை செவ்வாய்க்கிழமை (17) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரஞ்சித் குறிப்பிடுகையில்,நிதியமைச்சரான ஜனாதிபதியால் […]

உறுதியான கொள்கையை எப்போதுமே விடாப்பிடியாக தன் இதயத்தில் சுமந்து மண் விடுதலைக்காய் இறுதிவரை உழைத்தவர் அமரர் சிவாஜிலிங்கம்

தமிழ் தேசியத்தின் உறுதியான கொள்கையை எப்போதுமே விடாப்பிடியாக தன் இதயத்தில் சுமந்து பல அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள், படையினரின் விசாரணைகள் என பலவிதமான ஆபத்துக்களை எல்லாம் எதிர்கொண்டு ஈழமண் விடுதலைக்காக அற்பணிப்புடன் உழைத்த ஒரு பெருமகனை நாம் இழந்துள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அமரர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. மறைந்த தமிழ் தேசிய ஆளுமை அரசியல் வாதியான எம்.கே.சிவாஜிலிங்கம் எப்போதும் இனவிடுதலைக்காகவே தடம்மாறாமல், சோரம் போகாமல் தமது […]

சூரன் போர் நிகழ்வில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம்

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுகிழமை (15) சூரன் போர் நிகழ்வு இடம்பெற்றது. இதனால் பெருந்தொகையான பொதுமக்கள் ஆலய சுழலில் ஒன்று கூடியிருந்தனர். பொலிசாரால் கண்டிவீதியின் ஒரு பகுதி போக்குவரத்திற்காக மூடப்பட்டது. அதே வீதியின் மற்றய பகுதியால் இருவழி போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெற்றுவந்தது. எனினும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துச்சென்றமையால் அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்ப்பட்டது. வாகன விபத்து ஒன்றும் ஏற்ப்பட்டது. இதனால் அந்த வீதியை மூடி மாற்று வீதியால் வாகனங்களை அனுமதிக்குமாறு பொலிசாரிடம் பொதுமக்களும் ஆலய […]

இலங்கை தொழில்முனைவோர்களை ஒன்றிணைக்கும் ‘GLEC’ டிஜிட்டல் தளம் அறிமுகம்!

உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கைத் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்வல்லுநர்களை ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டுவரும் Global Lankan Entrepreneur Club (GLEC) டிஜிட்டல் தளம் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. GLEC கருத்தாக்கத்தின் ஸ்தாபகரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலீத் ஜயவீரவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைத் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலீத் ஜயவீர, மக்களின் மனங்களில் தொழில்முனைவோர் கருத்தாக்கங்களை ஆழமாக விதைத்து நாட்டுக்குச் செல்வத்தை […]

தாமரை கோபுரத்தை நீல நிறமாக்கிய விழிப்புணர்வுப் பயணம்

நீரிழிவு நோய் குறித்த தேசிய மற்றும் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில் உலக நீரிழிவு தினத்துக்கு இணங்க, தாமரை கோபுரத்தை நீல நிறத்தில் ஒளிரச் செய்யும் விசேட நிகழ்ச்சி ஒன்று இலங்கை நீரிழிவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் உலகளாவிய திட்டத்திற்கு இணங்க, உலக நாடுகள் பலவற்றிலும் பிரசித்தி பெற்ற சின்னங்கள் நீல நிற ஒளியால் ஒளிரச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், […]

ஷிரான் பாஸிக்கிற்கு மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல்!

முக்கியப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகம் (CCIB) மேலும் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளது. இலங்கையுடன் தொடர்புடைய பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் ஷிரான் பாஸிக், கடந்த மார்ச் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு (BIA) வந்தடைந்ததும், குற்றப் […]