வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான e-BMD திட்டம்

அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட e-BMD கட்டமைப்பு, தற்போது 62 தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.

மேலும் இது ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டில் 8,027 நபர்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். அரச சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக்கும் ஜனாதிபதியின் கருத்தியலுக்கு இணங்க, e-BMD திட்டம் 2025 ஜனவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயற்பாட்டின் 07 நாடுகளில் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த சேவை 2025 பெப்ரவரி 07ஆம் திகதி முதல் 62 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட நகல்களை தாம் வசிக்கும் நாட்டில் உள்ள தூதரகம் அல்லது உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து நேரடியாகப் பெற முடியும். இந்தச் சான்றிதழ்கள் சட்டப்பூர்வ அங்கீகாரத்துடன் வழங்கப்படுவதுடன், இதற்காக இனிமேல் இலங்கைக்கு நேரடியாக வருகை தரவோ அல்லது நீண்ட கால செயல்பாட்டில் ஈடுபடவோ தேவையில்லை.

இந்தச் சேவை ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான், மலேசியா, இந்தியா மற்றும் ஏனைய ஆசிய பிராந்தியங்களில் வசிக்கும் இலங்கையர்களுக்குக் கிடைக்கிறது. பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதை டிஜிட்டல் மயப்படுத்தி, தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களை தலைமை பதிவாளர் திணைக்களத்துடன் நேரடியாக இணைப்பதன் மூலம், ஆவணங்களின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து ஆவணங்களை தயார் செய்வதற்கான காலம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

தலைமை பதிவாளர் திணைக்களத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவால் வழங்கப்படும் நிகழ்நேர (Real-time) தொழில்நுட்ப ஆதரவு காரணமாக, தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் செயல்பாட்டு சிக்கல்களைத் தீர்த்து தடையின்றி தொடர்ந்து இச்சேவையை செயல்படுத்த உதவியுள்ளது. வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்

is

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய இராணுவீரர் இலங்கையில்?

April 18, 2026

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்