உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்திடம் அருட்தந்தை ரோஹன் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சமூக மற்றும் சமய மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து “நினைவு வலி மற்றும் நம்பிக்கை: ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீதியைத் தேடுதல்” எனும் தலைப்பிலான விசேட அறிக்கை வெளியிடப்பட்டது.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நேர்மறையான திசையில் நகர்வது போல் தோன்றினாலும் சர்ச்சைக்குரிய சாய்ந்தமருது சம்பவங்களின் போது கிழக்கு மாகாணத் தளபதியாகப் பணியாற்றிய தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர விசாரணைகள் முடியும் வரை அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான் நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைக்குத் தேவையான சூழலை உறுதிப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.