வெற்றிகரமாக நிறைவடைந்தது Legends & Icons Awards 2026!

Behind Me சர்வதேச ஊடக வலையமைப்பினால் கனடாவில் நேற்று மாலை நடாத்தப்பட்ட மாபெரும் விருது வழங்கல் நிகழ்வான Legends & Icons Awards 2026 மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள பல்துறைச் சாதனையாளர்கள் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டிலிருந்து (கனடா) வருகை தந்து நிகழ்வைச் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மும்மதங்களையும் சார்ந்த தலைவர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்து தமது ஆசியுரைகளையும் வழங்கியிருந்தார்கள். கனேடிய தேசியகீதம் தமிழ்த்தாய் வாழ்த்து மௌன அஞ்சலி ஆகியவை சம்பிரதாய பூர்வமாக நடைபெற்றதன் பின்னர் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சி எமது சமூகத்தைச் சேர்ந்த சாதனையார்கள் கௌரவிப்பு மாத்திரமன்றி இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் கனடா வாழ் வைத்திய நிபுணர்கள் இணைந்து கொண்ட ‘புற்றுநோய் விழிப்புணர்வு” செயற்திட்டமும் இணைந்ததாக வடிவமைக்கப்பட்டிருந்தமை பலரால் வரவேற்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியர்கள் மனிதர்களிடத்தில் ‘புற்றுநோய்’ குறித்த அச்சத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும். முக்கியமாக, குணப்படுத்தக் கூடிய நோயே இது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்கள். அத்துடன் மிக முக்கியமாக நோய்கள் குறித்த விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பக்க பலமாக Behind Me Media துணை நிற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள்.

Behind Me சர்வதேச ஊடகத்தின் தோற்றம் அதன் நிறுவனரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கணா செல்வாவினால் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த ஆவணத் தொகுப்பொன்று வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியவர்களுக்கு சிறப்பான கௌரவிப்பு வழங்கப்பட்டது என்பதோடு சாதனையாளர் கௌரவிப்பின்போது அவர்கள் ஒவ்வொருவரதும் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்திருந்த விடயங்கள் பற்றியும் இந்த மேடையில் கௌரவம் பெறுவதைப் பெருமிதப்படுத்தியும் பிரத்தியேகமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காணொளிகள் வெளியிடப்பட்டிருந்தன.

அது மாத்திரமன்றி Behind Me Mediaவுக்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட பாடல் வெளியீடும் விழா மேடையைக் கௌரவித்தது.

Behind Me சர்வதேச ஊடக வலையமைப்பின் நிறுவனரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கணா செல்வாவினால் வழங்கப்பட்ட ஏற்புரையில் ஈழத்தமிழருக்கான மேடை எம்மத்தியில் இல்லை என்பதாலும் உலகளாவிய ரீதியில் எம்மவர்கள் பல்துறைகளில் சாதித்துக்கொண்டிருப்பதை நாம் கௌரவிக்க வேண்டும் என்பதையும் கருத்திற்கொண்டு Behind Me Media மேற்படி நிகழ்வை ஒழுங்கமைத்ததைக் குறிப்பிட்டிருந்தார்.

மிக முக்கியமாக இந்த விழாவின் நாயகர்களாகத் திகழும் அனுசரணையாளர்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்த கணா செல்வா, எம்மவர்களிடத்தில் உள்ள திறமைகளுக்கான களத்தை நாங்கள் தான் வழங்கவேண்டும் என்பதே Behind Me Media உடைய நோக்கம். அதைவிட நோய்கள் பற்றிய விழிப்புணர்வை எமது மக்களுக்காக நாம் வழங்கவேண்டும் என்பதையும் கருத்திற்கொண்டு மேற்படி கௌரவிப்பு நிகழ்வுடன் சேர்த்து ‘புற்றுநோய் விழிப்புணர்வு’ குறித்த விடயங்களும் இந்த மேடையில் முன்னெடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறவுள்ள விருது வழங்கல் விழாக்களின் போதும் ஒவ்வொரு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வின் இடையிடையே இடம்பெற்ற ஆடல்களும் மிகச் சுருக்கமான உரைகளும் பார்வையாளர்களைச் சலிப்படையா வண்ணம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்