சென்னை:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முதலமைச்சருக்குரிய பாதுகாப்பு மற்றும் கான்வாய் வசதிகள் வழங்கப்பட்டது குறித்துத் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாகத் தமிழகத் தலைமைச் செயலாளர் சிவ்குமார் மற்றும் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில், ஆளுநரைச் சந்தித்து ஆலோசிப்பதற்கு முன்பே அதிகாரிகள் எப்படி விஜய்க்கு முதலமைச்சருக்குரிய வசதிகளைச் செய்து கொடுத்தார்கள் என ஆளுநர் அதிருப்தி தெரிவித்துள்ளார். “ஆட்சி அமைக்க இன்னும் முறைப்படி அழைப்பு விடுக்காத நிலையில், எந்த அடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது?” என அவர் வினவியுள்ளார். இதற்கிடையே, விஜய்யிடம் வழங்கப்பட்டிருந்த அந்தப் பாதுகாப்பு வளையம் மற்றும் கான்வாய்கள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காததைக் கண்டித்து மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவலை அடுத்து, புதிய அரசு அமையும் வரை சட்டம் – ஒழுங்கை மிகக் கடுமையாகப் பராமரிக்க வேண்டும் எனப் போலீஸ் உயரதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
#TNGovernor #Arlekar #VijaySecurity #DGP #ChiefSecretary #BreakingNews #May8 #TamilNaduPolitics #Vijay #TVK #ThalapathyVijay #VijayAsCM #SecurityProtocol #LawAndOrder #ChennaiNews #StalinVsVijay #ElectionResults2026 #PoliticalControversy #TNPolice #VijayMakkalIyakkam_“`