சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து, மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு நாளன்று துறைமுகம் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் மிரட்டப்பட்டதாகவும், ஸ்ரீரங்கத்தில் கட்சி அலுவலகம் எரிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். தோல்வி பயத்தில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகச் சாடிய அவர், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே 1 கி.மீ. தொலைவிற்கு எந்தவொரு அரசியல் கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் திரள அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினார். மேலும், ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடனேயே முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும், தபால் வாக்குகளை லெட்ஜர் நகல் அடிப்படையில் மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தவெகவின் இந்தக் கோரிக்கைகளை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரி, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
#TVK #AdhavArjuna #ElectionCommission #ArchanaPatnaik #TNElection2026 #CountingDay #May4 #SecurityMeasures #BreakingNews #TamilNaduPolitics #VijayTVK #ThalapathyVijay #FairElection #VoteCounting #ChennaiUpdate #May2 #PoliticalSafety #ElectionResults #LawAndOrder #DravidianPolitics_