சென்னை:
தமிழக அரசியல் களத்தில் தவெக அரசுக்கான ஆதரவு விவகாரம் பெரிய பிளவை உருவாக்கியுள்ளது. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திமுக-வின் முரசொலி நாளேடு மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தது. அதிமுக-வின் ஆதரவோடு அமைந்த தவெக ஆட்சியை ஆதரிப்பது சிபிஎம்-ன் கொள்கைக்கு முரணானது என்றும், குடியரசுத் தலைவர் ஆட்சி பற்றிய கருத்து உலகப் பம்மாத்து என்றும் முரசொலி சாடியிருந்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது எக்ஸ் தளத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டது. அதில், “பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐ(எம்)-க்கு எப்போதும் இல்லை” என்று குறிப்பிட்டு, தங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், திமுக-வின் செயல்பாடுகளை மறைமுகமாகச் சாடி, “வெளியே வேறு, உள்ளே வேறு” என்று முழங்கியுள்ளது. சிபிஎம்-ன் இந்த அதிரடிப் பதிவு, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை உறுதிப்படுத்துவதுடன், திமுக-சிபிஎம் இடையிலான உறவில் பெரும் கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார்த்தைப் போர் வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
#CPM #Murasoli #DMK #Vijay #ThalapathyVijay #TvkGovernment #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #PoliticalWar #TamilNaduPolitics #OppositionParty #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #Assembly #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #PoliticalClash #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalResilience #PublicRepresentation #Ideology