சென்னை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய ரஜினிகாந்த், “நம்ம பேசாமலேயே இருந்தால், வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கிறாய் என்பார்கள், பேச ஆரம்பித்தால் இப்போ பேசு என்பார்கள். பிடிக்காதவர்களுக்கு என்ன செய்தாலும் பிடிக்காது” என்று பேசினார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் சமீபத்தில் சட்டப்பேரவையில் ஆற்றிய பதிலுரை எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், ரஜினியின் இந்தப் பேச்சு அவருக்கு ஆதரவாகவும், அறிவுரை வழங்குவது போலவும் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ரஜினி பேசியது விஜய்க்கு எதிராகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது கருத்து மாறியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினிகாந்த் எப்போது பேசினாலும் பொடி வைத்துப் பேசுவார் என்று கூறப்படுவதால், அவரது இந்தப் பேச்சு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பட விழாவாகத் தொடங்கி அரசியல் விவாதமாக மாறியுள்ள ரஜினியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Rajinikanth #Dharman #CMVijay #TVK #Vijay #ThalapathyVijay #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #RajiniSpeech #TamilNaduPolitics #CinemaNews #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #PoliticalHints #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #PoliticalClash