வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக, கடந்த 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகள் கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும். என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இல் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அண்மைய காலநிலை பேரழிவைத் தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் குறிப்பாக மன்னார். முல்லைத்தீவு வவுனியா,கிளிநொச்சி,மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாரதூரமான நெருக்கடி நிலை குறித்து, விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் அவசர கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

நாடு பயிர்ச் சேதங்கள் குறித்து கவனம் செலுத்தி வரும் வேளையில்,எமது கால்நடை விவசாயம் மீது ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சிய மழை காரணமாக, 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகளும் மற்று கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்க குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும்.

ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக் மாடுகள் மற்றும் எருமைகளும், மற்றும் ஆடுகளும் உயிரிழந்துள்ளன.இறப்புக்கு சராசரி வெப்பநிலையை விட கணிசமாகக் குறைந்த கடும் குளிர் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இருந்த கால்நடைகளுக்குப் போதிய தங்குமிட வசதி இல்லாமையுமே இதற்குக் காரணம் என கால்நடை மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

நீண்டகால பால் உற்பத்தி இழப்பைத் தவிர்த்து,நேரடியாக கால்நடைகளின் பெறுமதி மட்டும் சுமார் 150 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.எனவே உயிரிழந்த கால்நடைகள் குறித்து அமைச்சு முறையான கணக்கெடுப்பை நடத்தி,ஒரு தெளிவான தரவுத் தொகுப்பை உருவாக்கியுள்ளதா?

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மாடு மற்றும் எருமை உரிமையாளர்கள் கோழிபாண்ணையாளர்களுக்கும், அதேபோல் தொடர்புடைய பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அமைச்சு எவ்வளவு இழப்பீடு வழங்கியுள்ளன? ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் விவசாயிகளுக்கு, உயிரிழந்த ஒவ்வொரு கால்நடைக்கும் உடனடி இழப்பீட்டுத் தொகுப்பை வழங்க அரசாங்கம் முன்வருமா?

பலவீனமான நிலையில் இருக்கும் எஞ்சிய கால்நடைகளுக்கு அவசர விற்றமின்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இது போன்ற அனர்த்தங்களுக்கு உள்ளாகும் வடக்கு மேய்ச்சல் நிலங்களில், வானிலையைத் தாங்கக்கூடிய கால்நடைத் தொழுவங்களை அமைப்பதற்கு மானியங்களை வழங்க அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தைக் கொண்டுள்ளதா?இந்த விவசாயிகளே எமது குழந்தைகளின் பசியைத் தீர்க்கும் பாலை வழங்குகிறார்கள். அவர்கள் தம்மால் கையாள முடியாத ஒரு காலநிலை பேரழிவினால் மேலும் கடனாளிகளாக மாற நாம் அனுமதிக்க முடியாது என்றார்.

maalai-malar_2026-04-29_qx0ocmbn_sreesaisilks0

சமூக வலைதளப் பிரபலம் நாகலட்சுமி கொ*லையில் அதிர வைக்கும் தகவல்கள்: கணவரின் ஈகோ விபரீதமான பின்னணி!

April 30, 2026

சென்னை: நங்கநல்லூரில் ‘Ready to Wear’ சேலை பிசினஸ் மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பிரபலமாக இருந்த தொழில் அதிபர்

collage-down-1777513973

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 234 வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தேர்தல் ஆணையம் அதிரடி!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் தலா

dailythanthi_2026-04-30_lol3o75a_kozadi33

கீழடி 11-ம் கட்ட அகழாய்வு: வரிசையாகக் கண்டெடுக்கப்படும் சாயக் கிண்ணங்கள் – வியப்பில் தொல்லியல் ஆய்வாளர்கள்!

April 30, 2026

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், அடுத்தடுத்து சாயக் கிண்ணங்கள் மற்றும் பழங்காலச் செங்கல்

ka_sengottaiyan

“கருத்துக்கணிப்பு வேறு, மக்கள் தீர்ப்பு வேறு” – 200 இடங்களில் தவெக வெல்லும் என செங்கோட்டையன் உறுதி!

April 30, 2026

சென்னை: “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பது குறிப்பிட்ட நபர்களின் தனிப்பட்ட கருத்து; மக்கள் தீர்ப்பு என்பது முற்றிலும் வேறானது” என்று

collage-down-1748402151

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் பக்தர்களுக்காக 100 இலவசப் பேருந்துகள் இயக்கம்!

April 30, 2026

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வரும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் வசதிக்காக, தற்காலிக பேருந்து நிலையங்களில்

684512279_1543096277856332_8658114898696776537_n copy

தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் இன்று அவசர ஆலோசனை!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

thirumavalavan-vck-2025-06-678bbbedc1311a5ad231b1963628d359

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து!

April 30, 2026

சென்னை: கடந்த 2019-ஆம் ஆண்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகத்

Ravi

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் திருட்டு: ஆஸ்திரேலியா எச்சரித்த பின்னரே விழித்துக்கொண்ட இலங்கை

April 30, 2026

கெலும் பண்டார இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் சுட்டிக்காட்டிய பின்னரே,

harsha

கோப் (COPF) குழு கூட்டத்தில் பங்கேற்க திறைசேரி செயலாளர் மறுப்பு: மக்கள் ஆணையை அவமதிக்கும் செயல் – ஹர்ஷ

April 30, 2026

திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவிப்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். மேலும், இந்த நாட்டு மக்கள்

Tilvin-Silva

ராஜபக்சாக்களின் பணம் கண்டுபிடிக்கப்படும்- தேசிய மக்கள் சக்தி உறுதி

April 30, 2026

கடந்த கால அரசாங்கங்களின் போது தலைவர்களால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆதரவுடன் அரசாங்கம்

Ranil

.முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணம்: இலண்டன் தூதரகம் மற்றும் பயண நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள்

April 30, 2026

பொதுப்பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட உயர்மட்ட வழக்கு ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி திலக்

Harshana-Suriyapperuma

நிதிச் செயலாளர் சமூகமளிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை: சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை

April 30, 2026

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சமூகமளிக்கத் தவறினால், அவருக்கு எதிராக நாடாளுமன்ற பொறிமுறையூடாக