குற்றவாளி தப்பிச் செல்ல போலிக் கடவுச்சீட்டு கொடுத்து உதவிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கெசல்வத்த தினூஷ’ வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காகப் போலி கடவுச்சீட்டைத் தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார். குறித்த உத்தரவானது நேற்று(05.03.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கெசல்பத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இஷார பஹல கலகே என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொலை, கப்பம் கோருதல், […]

மட்டக்களப்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம்

மட்டக்களப்பு மாநகரசபையில் ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் பிரஜா சக்தி திட்டத்தில் மாநகரசபை ஆளும் கட்சி உறுப்பினர்களை உள்வாங்கப்படவில்லை என தமிழரசு கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. மாநரசபையின் 8ஆவது சபையின் 11 பொதுக் கூட்டம் மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கிய நாதன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (05) சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த சபை அமர்வில் தேசிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டு பிரஜா சக்தி திட்டத்தில் […]

ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை அழித்துள்ளோம் – பஹ்ரைன்

மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர் ஏழாவது நாளாக நீடிக்கும் நிலையில், ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை தாம் அழித்துள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் சரமாரியான ஏவுகணைத் தாக்குதல் மற்றும் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. குறித்த வளைகுடா நாடுகளில் […]

சாந்திபுரம் பகுதியில் வீடு புகுந்து திருடிய நான்கு பெண்கள் கைது!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஆம் திகதி 04 இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார், சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் […]

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக மார்ச் மாதம் 18ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, […]

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7 பில்லியனை கடந்தது!

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 7,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. அண்மைக்கால தரவு அறிக்கைகளின்படி, 2026 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 7,284 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது. இது 2026 ஜனவரி மாதத்தில் காணப்பட்ட 6,832 மில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 6.6 சதவீத அதிகரிப்பாகும். கையிருப்புகளில் முக்கிய அங்கமான வெளிநாட்டு […]

தீவிரமடைந்து வரும் மோதல்; கச்சா எண்ணெய் விலை குறித்து கட்டாரின் எச்சரிக்கை!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 150 அமெரிக்க டொலர்கள் வரை உயரக்கூடும் என்றும், இதன் மூலம் புதிய எரிசக்தி நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளதாகவும் கட்டார் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி (Saad al-Kaabi) எச்சரித்துள்ளார். யுத்த மோதல்கள் விரைவில் முடிவுக்கு வந்தாலும், அதன் தாக்கங்கள் வழமைக்குத் திரும்புவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா […]

அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில் பிள்ளையானைச் சந்திக்க அனுமதி கோரிய சட்டத்தரணிகள்!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (06) சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு தான் […]

உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை

சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்காக உள்ளூர் கடல் பகுதிகளில் கடந்த பெப்ரவரி 16 முதல் 28 வரை கடற்படையினர் எடுத்த நடவடிக்கைகளில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், 2 டிங்கிகள், 3 படகுகள் மற்றும் 7 பாரம்பரிய படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கிழக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளால் திருகோணமலை […]

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை (மார்ச் 6) தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, கர்நாடகத்தில் சிறார்களின் நலனுக்காக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார். இந்த நிலையில், கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக, அம் மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். […]