தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்; ஸ்டாலினின் 14 முக்கிய அம்சங்கள் வெளியீடு!

முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்; நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்” என்று இப்போது நமக்குத் தேவையான கவிதையை எப்பொழுதோ எழுதிவிட்டார் மகாகவி […]
படகு விபத்துக்கான முழு விசாரணைக்கு பணிப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துயரார்ந்த படகு விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார். விபத்துக்குள்ளான படகு கடற் பயணத்திற்குத் தகுதியான நிலையில் இருந்ததா? பயணிகளின் எண்ணிக்கை வரம்பைத் தாண்டியதா? மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்து ஆராய்ந்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். கடலில் காணாமல் போயிருக்கக் கூடியவர்களைத் […]
ஈரானுக்கு ஆதரவாக இலங்கையில் ஆர்ப்பாட்டம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் நடத்திய இராணுவத் தாக்குதல்களைக் கண்டித்து, ‘எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே’ (No Blood for Oil) எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று (06) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், இப்பிராந்தியத்தில் நிலவும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தியும் ஏராளமான ஆர்வலர்களும் ஆதரவாளர்களும் இந்தப் போராட்டத்தில் திரண்டிருந்தனர். இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் ஐக்கிய மக்கள் […]
இலங்கையில் மிக உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை!

இலங்கையின் மிக உயரமான 6 அடி உயர சிவலிங்கம், இன்று (06) காலை புஸ்ஸல்லாவையில் மிக விமர்சையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தியாவின் பிள்ளையார்பட்டியிலிருந்து கொண்டு வரப்பட்ட 16 அடி உயரமான பிரம்மாண்ட பிள்ளையார் சிலையும், அதனுடன் 6 சிவலிங்கங்களும் புஸ்ஸல்லாவை, குபேரப்பட்டி ஸ்ரீ மகா கணபதி கற்பக விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இச்சிலைகள் இலங்கையில் அமையப்பெற்றுள்ள மிக உயரமான சிலைகளாகக் கருதப்படுகின்றன.
சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளை பிடித்த நால்வர் கைது

இலங்கை கடற்படையினர், மன்னாரின் தெற்கு கடல் பகுதியில் புதன்கிழமை (4) காலை நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 437 கடல் அட்டைகள், ஒரு டிங்கி படகு, சுழியோடி உபகரணங்களை கடற்படையினர் கைப்பற்றினர். அதன்படி, மன்னார் தெற்கு பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலா கஜபா நடத்திய இந்த சிறப்பு தேடுதல் […]
போர் விமானம் விபத்து ; இரண்டு விமானிகள் உயிரிழப்பு

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் சுகோய்-30 MKI ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் வியாழக்கிழமை ஜோர்ஹாட்டிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி ஆங்லாங் பகுதியில் விபத்துக்குள்ளானது என இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளது. “சுகோய்-30 போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானிகள் அனுஜ், புர்வேஷ் துராக்கர் ஆகியோர் உயிரிழந்ததை விமானப்படை உறுதிப்படுத்துகிறது. உயிரிழந்த விமானிகளுக்கு […]
கடற்படையால் மருத்துவமனை வளாகம் துப்புரவு!

“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்திற்கு இணங்க, கடற்படையினரால் காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவமனையில் திங்கட்கிழமை (2) துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன், கராப்பிட்டிய தேசிய மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த பொலித்தீன் மற்றும் காகிதம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் முறையாக கடற்படையினர் அப்புறப்படுத்தினர்.
பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை நீடிப்பு!

பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 81 ஆம் இலக்க பாடத்தின் கீழ் உள்ள பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கிடையில், அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் கீழ் பிரேரணை முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.மத்திய கல்லூரிக்கு எதிரான வடக்கின் சமர்: வெற்றியை நோக்கிச் செல்லும் சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எதிரான 119ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் உதயனன் அபிஜோய்ஷாந்த் குவித்த அபார சதம், சென். ஜோன்ஸ் கல்லூரியை வெற்றியை நோக்கி நகரவைத்துள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இப் போட்டியில் 248 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடியில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. […]
திரிப்போலியில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

லெபனானின் வடக்கு நகரமான திரிப்போலியில் (Tripoli) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தளபதி வாசிம் அத்தல்லா அலி (Wasim Attallah Ali) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேலிய கடற்படை வீரர்கள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்ததாகவும், கொல்லப்பட்ட அலி ஹமாஸ் போராளிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் முக்கியப் பங்காற்றியவர் என்றும் டெலிகிராம் வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து ஹமாஸ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை. லெபனான் மீதான தனது தாக்குதல்களை […]