பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் தேசிய பராமரிப்புக் கொள்கை பரிந்துரை

பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (5) முன்வைக்கப்பட்ட ‘தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும்’ பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.. அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றைப் […]

அமெரிக்காவை கண்டிப்பதற்கு அரசு அச்சப்படுகிறது – எம்.பி. உதுமாலெப்பை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிராேத நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை கண் இருந்தும் குருடர் போன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அதேபோன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தி அதன் ஆன்மிக தலைவரை கொலை செய்த அமெரிக்காவை கண்டிப்பதற்கு ஜனாதிபதி உள்ளி்ட்ட அரசாங்கம் அச்சப்படுவதையிட்டு முஸ்லிம் சமூகம் கவலையடைகிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை(5) இடம்பெற்ற மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை […]

மத்திய கிழக்கு மோதல்; ஜனாதிபதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு

தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும் நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம். எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது எந்த வகையிலும் எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகவோ எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலோ பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். மோதல் ஆரம்பமான சந்தர்ப்பம் முதல் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எமது அறிவிப்புகள் என்பன எமது நிலைப்பாட்டிற்குட்பட்டதாகவே முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையிலே […]

டொராண்டோ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் மொன்றியலில் கைது!

டந்த வருடம் ஜூலை மாதம் டொராண்டோவில் இடம்பெற்ற கொலைக் குற்றத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த 24 வயதுடைய பிரையன் ஃபுவென்டெஸ் கிராமா கோவை, புதன்கிழமை இரவு மொன்றியல் காவல்துறை கைது செய்துள்ளது. ஃபுவென்டெஸ் கிராமாகோ டொராண்டோவில் மார்ச் 10 அன்று நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. யோர்க்டேல் ஷாப்பிங் சென்டர் வாகன நிறுத்துமிடத்தில் 28 வயதுடைய காஷிப் ஜமால் பென்ட்லி-ஜீன் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்பாக, ஃபுவென்டெஸ் கிராமாகோ […]

கனேடிய சுற்றுலாப் பயணி அவுஸ்திரேலியாவில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

அஸ்திரேலியாவில் ஜனவரியில் உயிரிழந்த கனேடிய சுற்றுலாப் பயணி, டிங்கோ தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்குப் பிறகே நீரில் மூழ்கி இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் காம்பெல் ரிவர் நகரைச் சேர்ந்த 19 வயதான பைப்பர் ஜேம்ஸ், ஜனவரி 19 அன்று அஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலக் கடற்கரைக்கு அருகிலுள்ள மணல் தீவான கே’காரி (K’gari) பகுதியில் உள்ள ஒரு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த தீவு பிரிஸ்பேன் நகரத்திலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ளது. […]

மாத்தறையில் சர்வதேச மகளிர் தினம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும். பெண்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இருக்காமல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொண்டு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆளுமை செலுத்த முன்வர வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் […]

உயிரிழந்த இளம்பெண் உடல் துஷ்பிரயோகம்: அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் […]

அடுத்த கட்டத்தை நோக்கி ஈரானுக்கு எதிரான போர்…

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தமது நாடு தற்போது போரின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். உடனடியாக ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ஈரானின் […]

உயர்தர தொழிற்கல்விப் பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்

2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களை இணைத்துக் கொள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளைக் கருத்திற் கொள்ளப்படாது. 2025, 2026 அல்லது கடந்த மூன்று ஆண்டுகளில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது பிரதேசத்தில் இப்பாடநெறியைக் கொண்ட பாடசாலைகளில் இணைந்து கொள்ளலாம். மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் 12 ஆம் தரத்தில் […]

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிரடியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதன் நேரடித் தாக்கம் இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச காப்புறுதி நிறுவனங்களான கார்ட், ஸ்கல்ட், மற்றும் லண்டன் பி&ஐ கிளப் போன்றவை பாரசீக வளைகுடா பிராந்தியத்திற்கான ‘போர் கால இடர் காப்புறுதியை’ மார்ச் மாதம் 05 ஆம் […]