கடலில் காணாமல் போனோரை தேடும் பணி முன்னெடுப்பு

யாழில் கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பாலைதீவு திருவிழாவுக்கு ,இன்று வெள்ளிக்கிழமை (06) படகு ஒன்றில் பலர் சென்ற நிலையில் குறித்த படகு கவிழிந்துள்ளது. இந்நிலையில், 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரும் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர். படகில் பயணித்தோரின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், கடலில் காணாமல் போனோர் இருக்கலாம் என்ற ரீதியில் சுழியோடிகள் மூலம் தேடும் […]
பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம்

தஞ்சம் கோரி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு £40,000 வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ள புதிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு £10,000 வீதம் ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் நான்கு பேருக்கு இந்தத் தொகை வழங்கப்படும் இந்தச் சலுகையை ஏழு நாட்களுக்குள் ஏற்றுக்கொண்டு வெளியேறத் தவறினால், அவர்கள் கட்டாயமாக நாடுகடத்தப்படுவார்கள் என்று அரசு எச்சரித்துள்ளது. தற்போது சுமார் 150 குடும்பங்களை இலக்காகக் […]
மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு
இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் படி, மின் உற்பத்தி, கடத்தல், விநியோகம் மற்றும் அமைப்பு இயக்கங்களுக்காக ஆறு புதிய நிறுவனங்களை நிறுவுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் […]
இந்தியா – ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள் சலுகை காலத்தை வழங்கியுள்ளது. அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அனுமதியில், 2026 மார்ச் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரஷ்ய கூட்டமைப்பிற்கு சொந்தமான மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்தியாவிற்குள் விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளை […]
அண்டை நாடான அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்

ஈரானின் அண்டை நாடான அஜர்பைஜானின் நாக்சைவான் பகுதியில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நாட்டில் அமெரிக்காவின் இராணுவ தளம் இல்லை. ஆனால் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக அஜர்பைஜைன் செயல்படுவதால் ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு தகுந்த பதிலடி தருவோம் என்று அஜர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டார் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தை குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. ஐக்கிய அரபு […]
இந்தியாவில் கரை ஒதுங்கிய மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்து, இந்தியாவில் கரை ஒதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு யாழ். மீனவர்களையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மீனவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது, இயந்திரக் கோளாறு காரணமாகப் படகு செயலிழந்தது. இதனால் ஆறு நாட்களுக்கும் மேலாகக் குடும்பத்தாருடனான அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த […]
தூதரகத்தை மூடும் அமெரிக்கா

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய தரவுக் கட்டமைப்பில் உள்ள தரவுகளை முற்றிலுமாகத் அழிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தின் வான்வெளியில் ஊடுருவிய ஏவுகணைத் தாக்குதலைத் தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளதாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு; ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் யோசனை?

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றிய அவர், இந்த ஆணைக்குழு ஊடாக அரச சேவையின் சம்பள முரண்பாடுகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் குறித்து […]
மீண்டும் தலைதூக்கும் டெங்கு!
மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக இந்நோய் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகள்: கொக்குவில் பகுதியில் 12 பேரும், கோட்டமுனை பகுதியில் 6 பேரும் என மொத்தம் 18 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடலில் மூழ்கியது!

இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் சாய்ந்தமருது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கடல் பகுதியில் வியாழக்கிழமை (5) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய இயந்திரப் படகு, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் கடலில் மூழ்கியுள்ளது. கடற்கரையிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள இப்படகினை மீட்கும் முயற்சியில் […]