நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடலில் மூழ்கியது!

இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் சாய்ந்தமருது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கடல் பகுதியில் வியாழக்கிழமை (5) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய இயந்திரப் படகு, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் கடலில் மூழ்கியுள்ளது. கடற்கரையிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள இப்படகினை மீட்கும் முயற்சியில் மீனவர்களும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.

கனரக வாகனங்கள் மூலம் படகைக் கரைக்கு இழுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இலங்கை கடற்படையினரின் உதவியைப் பெறவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்திற்கு இப்பகுதியில் நிலவும் உட்கட்டமைப்பு குறைபாடுகளே காரணம் என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடற்கரை நிலப்பரப்பு வேகமாக உள்வாங்கப்படுவதால், மீனவர்கள் ஓய்வெடுக்கும் இடங்களும், வலைகளைப் பழுதுபார்க்கும் நிழல் தரும் தென்னை மரங்களும் கடலரிப்பினால் அழிந்து வருகின்றன.
மீன்வாடிகள் இல்லாமை: உபகரணங்களைப் பாதுகாப்பாக வைக்க இடவசதி இல்லாததால், பல இலட்சம் ரூபாய் சொத்துக்கள் இயற்கை அனர்த்தங்களுக்கு இலக்காகின்றன.

Harshana-Suriyapperuma

நிதிச் செயலாளர் சமூகமளிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை: சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை

April 30, 2026

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சமூகமளிக்கத் தவறினால், அவருக்கு எதிராக நாடாளுமன்ற பொறிமுறையூடாக

sund

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

April 30, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நீதியான விசாரணைகள்

Kajen

இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சி குறித்து…

April 30, 2026

“ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும்

mann

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

April 30, 2026

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய

soor

நிதிபற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது – திறைசேரி செயலாளர்

April 30, 2026

அரச நிதிப்பற்றியக் குழுவில் இன்று முன்னிலையாக முடியாதென திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். அது

FB_IMG_1777466129432

விளையாட்டில் அரசியல் வேண்டாம்: எரானுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘மாற்றத்திற்கான குழுவின்’ (Transformation Committee) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின்

684152693_122289994754194641_3108322150554372323_n

ஆள் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக விசாரணை: 47 வயது நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

காணாமல் போன சிறுமி ஒருவர் மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, 47 வயதுடைய நபர் ஒருவர்

peel poli

மிசிசாகாவில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

April 30, 2026

மிசிசாகாவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்கள் மீது

canada police251

கால்கரியில் தபால் பெட்டி உடைப்பு: இருவர் மீது 98 குற்றச்சாட்டுகள் பதிவு

April 30, 2026

நகரின் வடகிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற தபால் பெட்டி (Mailbox) உடைப்புச் சம்பவங்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு ஆண்கள்

683205215_122290010084194641_7110331960142875781_n

வின்னிபெக் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச் சம்பவங்கள்: ஒன்டாரியோ இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

வின்னிபெக் நகரில் உள்ள உள்ளூர் வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச்

682498274_122290014542194641_8190665495581400332_n

வட ஒன்டாரியோ சிறுவன் கடத்தல் விவகாரம்: சிறைத்தண்டனையைத் தொடர்ந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் குற்றவாளி

April 30, 2026

வட ஒன்டாரியோவில் (Northern Ontario) சிறுவன் ஒருவனைக் கடத்திய குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராம்ப்டன் (Brampton) பகுதியைச் சேர்ந்த 37

687038414_122290016300194641_7422793790922838407_n

டொராண்டோ நகரில் நடந்த கொள்ளைச் சம்பவம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை

April 30, 2026

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown) நடந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின்