பீல் பிராந்திய காவல்துறையின் மக்கள் சந்திப்பு!

எங்கள் தெற்காசிய கூட்டு ஐ.எஸ்.என்(South Asian Collective ISN) நடத்திய இரண்டாவது மக்கள் சந்திப்பு நிகழ்வு நெட்வொர்க்கிங் கற்றல் மற்றும் கலந்துரையாடலுக்கான தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வு சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களை ஒன்றிணைத்தது சுட்டிக்காட்டத் தக்கது என பீல் பிராந்திய காவல்துறை தனது வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. சிவில் தலைவர்கள் தங்களது தொழில் பயணங்களையும் தலைமைத்துவ அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு, எங்கள் சேவையின் சேவையின் விஸ்தீரண வளர்ச்சி பற்றியும் தொழில்முறை முன்னேற்றமும் மேம்படவும் உதவினர் […]
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம் நோக்கிச் சென்ற படகு விபத்து: ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரைப் பிரதேசமான குருநகர் இறங்கு துறையிலிருந்து, பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களின் படகு ஒன்று நீரில் மூழ்கியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய பக்தர்களை மீட்கும் பணி தொடருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் பயணம் படகில் செய்தனர். இதுவரை மூன்று பேர் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. சென்ற 4 ஆம் புதன்கிழமை கொடியேற்றப்பட்டு இன்று […]
ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டம்!

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் எங்கள் திட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்தோம். அதற்காக, விண்ட்சர் நகரில் அமைந்துள்ள புதிய நெக்ஸ் ஸ்டார் எனர்ஜி (Next Star Energy) பேட்டரி உற்பத்தி ஆலையின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த மிகப்பெரிய புதிய ஆலை முழு திறனில் செயல்படும் போது உயர்ந்த ஊதியம் பெறக் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டந்த நவம்பரில் உற்பத்தி தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரு […]
’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸார் கடந்த புதன்கிழமை (4) மாலை மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் விசேட வீதித் தடையை ஏற்படுத்தி, யாத்ரீகர்களின் வாகனங்களைச் சோதனையிட்டனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த இரு இளைஞர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர்கள் மாத்தளை, உக்குவலை பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள். இவர்களிடமிருந்து தலா 15 – 20 மில்லி […]
பாதாள உலகக் குழுத் தலைவர் கொலை வழக்கு:’கெசல்பெத்தர பத்மே’ விசாரணைக்காலம் அதிகரிப்பு

கொழும்பு நீதவான் நீதிமன்றக் கூண்டுக்குள் வைத்து, பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கனேமுல்ல சஞ்சீவ’வைச் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான ‘கெசல்பெத்தர பத்மே’ என்பவரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம, கடந்த திங்கட்கிழமை (05) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். வழக்கின் பின்னணி மற்றும் விசாரணை நிலவரம்: தடுப்புக்காவல் […]
வடக்கின் சமர் ஆரம்பம்

உலகெங்கும் வாழும் யாழ். கல்வி நிறுவனங்களின் பழைய மாணவர்களாலும், விளையாட்டு ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 119-வது மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று (06) உற்சாகமாக ஆரம்பமானது. யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (06) காலை இரு கல்லூரிகளினதும் கீதங்கள் இசைக்கப்பட, வீரர்களின் அறிமுகத்துடன் போட்டி சம்பிரதாயபூர்வமாகத் தொடங்கியது. நாரதக் கின்னரர் முதல் தற்கால இளைஞர்கள் வரை திரண்டுள்ள மைதானம் விழாக்கோலம் பூண்டுள்ளது. […]
கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (5) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சம்பந்தப்பட்ட கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறித்த கப்பலில் மொத்தம் 208 பணியாளர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஓய்வு பெற்ற வான்படை அதிகாரி ஒருவர் தாக்கல் செய்துள்ளார். இதில் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோரும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் மனுவின்பிரதிவாதிகளாக […]
கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!
புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மதுரங்குளியவில் இருந்து ரணவிரு வசந்த மாவத்தை வழியாக குருங்கன்வெட்டிய நோக்கி பயணித்த லொறி, எதிர் திசையில் இருந்து வந்த இரு சிறுவர்கள் பயணித்த சைக்கிளில் மோதியது. அப்போது இரண்டு சிறுவர்கள் பலத்த காயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். […]
அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் (05) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டு முதல்வரின் தலைமையுரையுடன் சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது. இதன்போது சபையின் குழுக்களினால் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகரசபை அமர்வில் இன்றைய அரசாங்கத்தினால் பல வீதிகளை […]