அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மேலும் பலவீனமடைந்து வருவதால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், இதன் காரணமாக ஜூலை மாதம் வரவிருக்கும் வருடாந்த பஸ் கட்டணத் திருத்தத்தின் போது குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த விஜேரத்ன, வருடாந்த பஸ் கட்டணத் திருத்தமானது கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் (CCPI), அமெரிக்க டொலர் மாற்று விகிதம், வட்டி விகிதங்கள் மற்றும் பஸ்களின் விலை உள்ளிட்ட 12 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.