சென்னை:
பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மீது முந்தைய திமுக ஆட்சியில் பாய்ந்த குண்டர் சட்டம் (Goondas Act) அதிரடியாக ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான உத்தரவை அப்போதைய பெருநகர சென்னை காவல் ஆணையர் பிறப்பித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உள்விவகாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது: “சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அது குறித்த விரிவான விவரங்கள், அரசின் சட்ட ஆலோசனை வாரியத்திடம் (Advisory Board) முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டன. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்த ஆலோசனை வாரியம், சவுக்கு சங்கரைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைப்பதற்குப் போதுமான வலுவான காரணங்கள் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது.
ஆலோசனை வாரியத்தின் அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், சவுக்கு சங்கருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட தடுப்புக் காவல் உத்தரவை அரசு தற்போது முழுமையாக ரத்து செய்கிறது. வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இல்லாவிட்டால், சவுக்கு சங்கர் உடனடியாகச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற உடனேயே சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#SavukkuShankar #GoondasActRevoked #BreakingNews #May20 #SavukkuShankarReleased #AdvisoryBoard #SecretariatTN #ThalapathyVijay #TVK_Government #NewGovernmentTN #ChennaiPolice #FreedomOfSpeech #TN_Politics2026 #YouTuberSavukku #LawUpdatesTN #PoliticalSensations #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`