எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அன்று தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தாங்கள் முன்னெடுக்கும் வழமையான மே தின எழுச்சிக் கூட்டங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களைத் தையிட்டியில் (Thaiyitty) நடத்துமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாகவும், சித்திரை பௌர்ணமியாகவும் அமைகின்றது. இது சிங்கள மக்களுக்கும் ஒரு முக்கியமான நாளாகும்.
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் செயல்படும் தமிழ் தேசியக் கட்சிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து, தையிட்டி விகாரைக்கு எதிரான தமது பலமான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்பார்ப்பு: வழமையாக வெவ்வேறு இடங்களில் நடத்தப்படும் மே தின நிகழ்வுகளை இம்முறை தையிட்டியில் நடத்துவதன் மூலம், அங்குள்ள காணி அபகரிப்பு மற்றும் விகாரை நிர்மாணத்திற்கு எதிரான ஒரு பாரிய மக்கள் எழுச்சியை வெளிப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்