மூன்று தமிழ்க் கிராமங்களை சிங்கள கிராமங்களுடன் இணைக்க தீர்மானம்?

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு இன்று (24) பிற்பகல் விஜயம் மேற்கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேச செயலாளர் இரங்கநாதனுடன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது எல்லை நிர்ணய சபையினால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள கிராமங்களுடன் இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றுவதற்கான முயற்சிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இவ்விடயம் தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக, இன்று நான் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் சந்திக்க பிரதேச செயலகத்திற்குச் சென்றேன். இச்சந்திப்பில் போரதீவுப்பற்று தவிசாளர் கௌரவ வி. மதிமேனன், பிரதேச சபை உறுப்பினர்கள் அ. பிறேமாகரன், ம. கோபிநாத், கா. யோகராசா மற்றும் தே. ஜேனுகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக எந்தவித தகவலும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்தார். எல்லை நிர்ணயம் தொடர்பாக சில இடங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தாலும், குறிப்பிட்ட கிராமங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல், மட்டக்களப்பின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமப் பிரிவுகளுடன் இணைப்பதற்கான கூட்டம் நடைபெற்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இதில் சில முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தின் சிங்கள கிராமங்களுடன் இணைப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25 ஆம் கொலணி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட குமாரிகம கிராமத்தையும் இணைத்து, ‘சமகிபுர’ என்ற புதிய கிராமத்தை உருவாக்கி அம்பாறை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருதல். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ராணமடு கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட சுகதகம கிராமத்துடன் இணைத்தல் ,மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட கோணகல கிராமத்துடன் இணைத்தல் போன்ற திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்

is

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய இராணுவீரர் இலங்கையில்?

April 18, 2026

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்