முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு கேப்பாப்புலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கடந்த 07.01.2026அன்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், அந்த மக்களுக்கு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பொய்யான தகவலுக்கு உடனடியாக எதிர்ப்புத்தெரிவித்த துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55 பேருக்குரிய 59.5 ஏக்கர் காணிகளும் 4 பேருக்குரிய 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் உண்மைநிலையினை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவால் இதன்போது இராணுவத்தினரிடம் கோரப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 159.5 ஏக்கர் மக்களின் காணிகள் தொடர்பான உண்மையான விபரங்களை தாமும் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ரவிகரன் நடவடிக்கை எடுத்தார்.

அதற்கமைய கடந்த 12.01.2026 அன்று முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலாளர் அ.உமா மகேஸ்வரனை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளின் விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அதிகாரபூர்வ தரவுகளை தம்மிடம் கையளிக்குமாறு ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்தார்.

அதற்கமைய 12.01.2026ஆம் திகதியிடப்பட்ட DSM/LAN/KEP/MPP/2025/21ஆம் இலக்க கடிதத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரால் கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அதிகாரபூர்வ தரவுகள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அதிகாரபூர்வ தரவுகளை கடந்த 14.01.2026அன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதத்துடன் இணைத்து அனுப்பிவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக வாழ்விடத்தை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கெள்ளுமாறும் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 18.01.2026 அன்று கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான கோரிக்கைக் கடிதத்துடன் ரவிகரனால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தவகையில் பதினாறு ஆண்டுகளாகத் தமது சொந்த நிலத்தில் குடியேறக் காத்துக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் குடியிருக்கச்செய்வதற்கு தேவையான உத்தரவுகளையும், உரிய நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு குறித்த ஜனாதிபதிக்கான கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 14.01.2026அன்று நாடாளுமன்ற உறுபினர் ரவிகரன் கேப்பாப்புலவு காணி விடுவிப்புத் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிரதேசத்திலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள PS/DA/SAD/06/41-Vol.01ஆம் இலக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

மேற்குறித்த விடயம் தொடர்பாக வன்னி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் சனாதிபதி அவர்களுக்கு அனுப்பப்பட்ட 2026.01.14 திகதிய கடிதம் தொடர்பானது. (பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)

அந்த கடிதத்தின் மூலம், முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களால் மாதாந்தம் இந்த அலுவலகத்திற்கு அனுப்பப்படும் காணி விடுவிப்பு பற்றிய முன்னேற்றம் தொடர்பான ஆவணத்தை ஆய்வு செய்தபோது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணிகள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருப்பது அவதானிக்கப்படுகின்றது.

அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தயவுடன் அறியத்தருகின்றேன் – எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க