‘முழு நாடுமே ஒன்றாக’ ; தேசிய செயற்பாடு – 81 சிறுமிகளுடன் 1,772 சிறுவர்கள் கைது

போதைப்பொருளை ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக ’ தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று ( 18) கூடியது. இக்கூட்டத்தில், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அதிரடி முடிவுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டது. முக்கிய தீர்மானங்கள் மற்றும் ஜனாதிபதியின் பணிப்புரைகள்: சட்டத் திருத்தம்: கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கும், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் உள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்கும் சட்டத் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். நம்பிக்கையை உறுதிப்படுத்துதல்: […]
வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் ஈரான் தாக்குதல்!

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் படைத் தளபதி கோலம்ரேசா சொலைமானி ஆகியோர் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கலாக, ஈரான் இன்று புதன்கிழமை (18) வளைகுடா நாடுகள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்கியுள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் வான் எல்லைக்குள் புகுந்த இந்த ஏவுகணைகள் அந்நாடுகளின் முக்கிய ராணுவ மற்றும் பொருளாதார மையங்களைக் குறிவைத்தன. […]
செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் பிரமிட்டுகள்!

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எகிப்திய பிரமிட்டுகளைப் போன்ற ஒரு மர்மமான அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாசாவின் ‘மார்ஸ் குளோபல் சர்வேயர்’ (MGS) செயற்கைக்கோள் 2001-ஆம் ஆண்டு எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்தபோது, கீத் லானி (Keith Laney) என்ற ஆராய்ச்சியாளர் இந்த முக்கோண வடிவ அமைப்பைக் கண்டறிந்தார். பூமியில் இத்தகைய ஒரு அமைப்பு காணப்பட்டால், நாம் இந்நேரம் அதைத் தோண்டி ஆய்வு செய்திருப்போம் என்று அவர் வியப்புடன் […]
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். இஸ்ரேல் உளவுப்பிரிவிடம் 10 இலட்சம் டொலர் கோரினாரா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1987ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்காக இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இடமிருந்து 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாகக் கோரினார் என்ற அதிரடித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் இரகசிய ஆவணங்கள் அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ‘த வயர்’ இணையத்தளம் வெளியிட்டுள்ள புலனாய்வுக் கட்டுரையில் இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 14 ஆகிய திகதிகளில் பரிமாறப்பட்ட இரகசியத் தகவல்களின்படி, […]
விசாரணையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் விதத்தில் ஜனாதிபதி நடக்கின்றார்?

நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என ஜனாதிபதி அண்மையில் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்திருப்பது அந்த விசாரணையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் ஒரு முறையற்ற செயல் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடு தற்போது மிகவும் கடினமான சமூக-பொருளாதார […]
வெள்ளவத்தையில் சட்டத்தரணியொருவரின் ஆவணத்தைப் பயன்படுத்தி பண மோசடி; இருவர் கைது
சட்டத்தரணியொருவரின் ஆவணமொன்றை பயன்படுத்தி வங்கி கணக்கொன்றிலிருந்து 48,805,275.00 ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு 03 இற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை (17) கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும், குறித்த மோசடிக்குத் துணை நின்ற குற்றச்சாட்டின் கீழ், சம்பந்தப்பட்ட மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 45 […]
மாறிவரும் தற்போதைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது

உலகளாவிய அதிகாரப் பகிர்வு மற்றும் வர்த்தகப் பாதைகள் மாறிவரும் தற்போதைய சூழலில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியமானது உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளதாக WION சர்வதேச மாநாட்டில் (WION Global Summit) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடல் என்பது மோதல்களுக்கான வலயாக இல்லாமல், நாகரிகங்களை இணைக்கும் பாலமாகவே இருந்துள்ளது. குறிப்பாக, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம புத்தரின் போதனைகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு […]
மலையக மக்களின் மீள்கட்டமைப்பு: கோரிக்கை ஆவணக் கையொப்பமிடல்!

‘டித்வா’ பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான விசேட ஒன்றுகூடலும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிடும் நிகழ்வும் நாளை வியாழக்கிழமை (19) கொழும்பில் நடைபெறவுள்ளது. மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, கொழும்பு-07 இல் அமைந்துள்ள மகாவலி கேந்திரத்தில் நாளை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை இடம்பெறவுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாட்டில் ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு மலையக […]
நெல் கொள்வனவு தொடர்பில் வவுனியா விவசாயிகள் முறைப்பாடு

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனம் செய்வதில் பல்வேறான இடர்பாடுகளும் முறைகேடுகளும் இடம்பெறுவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரனுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த இடத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் நிலைமைகளை ஆராய்ந்து இருந்தார். இந்நிலையில் குறித்த களஞ்சியசாலையின் முகாமையாளரின் செயற்பாடுகள் விவசாயிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் முறையற்ற விதத்தில் ஒரு திட்டமிடப்படாத வகையிலும் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்வது மற்றும் நீண்ட […]
மாபெரும் குண்டு வீச்சுக்களால் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுங்கு குழிகளை ஊடுருவும் திறன் கொண்ட சக்திவாய்ந்த குண்டுகளைக் கொண்டு ஹோர்முஸ் ஜலசந்தி நெடுகிலும் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் எக்ஸ் தள பதிவில், ஜலசந்தியின் ஈரானிய கடற்கரையோரம் உள்ள “பலப்படுத்தப்பட்ட ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது, 5,000 பவுண்டு எடை கொண்ட பல ஆழ்துளை […]