நெருக்கடிகளை மறைத்து ஜனாதிபதி கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை – ஹரீன்

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கற்பனைக் கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் பொருளாதாரக் கையாளுகை குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நெருக்கடி காலத்தில் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டுச் சென்றார் என்பதைச் […]
பண்டாரவளை வீட்டுத்திட்டப் பகுதிக்கு பிரதி அமைச்சர் பிரதீப் கண்காணிப்பு விஜயம்

பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் செவவாய்க்கிழமை (17) நேரில் சென்று பார்வையிட்டார். வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் பிரதீப், இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இவ்வீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 50 வீடுகளை பயனாளிகளுக்குக் கையளிக்கவுள்ளோம். இதனை வருடத்தின் ஆரம்பத்திலேயே பயனாளிகளுக்கு வழங்குவதற்கு உத்தேசித்திருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்ட டித்வா பேரிடர் காரணமாக தாமதம் ஏற்பட்டது […]
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விவகாரம் : ரவிகரன் ஜனாதிபதிக்கு கடிதம்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (14) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு கேப்பாப்புலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி […]
இணையத்தள மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்பட சீனா தயார்

தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் சட்ட அமுலாக்க அமைப்புகள் அண்மையில் இணையவழி மோசடிகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு சந்தேக நபர்களை கைதுசெய்திருந்த அதேவேளை, குறித்த நபர்களில் சீனப் பிரஜைகளும் அடங்குவது குறித்து சீனா கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றச்செயல்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுடன், சட்டத்தின் […]
அக்கரைப்பற்று பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு!

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட சடலம் முதலை கடித்து உள்ளதா? அல்லது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதா என அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் 5 அடி 6 […]
சுற்றுலாத் துறை அமைச்சின் விசேட அறிவிப்பு

சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளுக்காகப் பதிவு செய்யும் முறைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள வாகனங்கள் மற்றும் ஏனைய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தகுதியுடைய தரப்பினர் அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமையப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையமான ‘கிரீன் ஸோன்’ பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணைகள் அல்லது ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலில் உயிர்ச்சேதங்கள் அல்லது காயங்கள் குறித்த விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. தாக்குதலைத் தொடர்ந்து தூதரகப் பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், அங்குள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் […]
குடிவரவு மோசடி சந்தேக நபர் விடுவிக்கப்பட்டு கனடா மீது வழக்குத் தொடர அனுமதி

40 வயதான இந்தியரான குர்பிரீத் சிங், கனடா அரசாங்கம் மற்றும் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் (CBSA) ஊழியர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர்கள் தன்னைகுற்றவாளி என்ற எண்ணத்துடன் வழக்குத் தொடர்ந்ததாகவும்இ தனது சாசன உரிமைகளை மீறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பல ஆண்டுகளாக நீதித்துறையில் இழுபறியாக இருந்து வரும், சஸ்காட்செவனில் நடந்த ஒரு மாபெரும் குடிவரவு மோசடி செய்தியில் சமீபத்தில் ஏற்பட்ட திருப்பம் இதுவாகும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 2022-ல், இந்தியாவிலிருந்து குடியேற விரும்பும் நபர்களுக்குப் […]
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றில் உரையாற்றியவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். சரக்குக் கட்டணங்கள் அதிகரித்ததன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகள் சிறிதளவு உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் கடை உரிமையாளர்களும் மொத்த வியாபாரிகளும் தேவையற்ற […]
இலங்கையை நோக்கி வரும் நிலக்கரி கப்பல்கள்

எதிர்பார்க்கப்படும் வறட்சி அல்லது நிலக்கரி இறக்குமதி தாமதங்கள் காரணமாக, நாட்டின் மின்சார விநியோகத்துக்கு இதுவரை எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் தெரிவித்துள்ளார். மின் உற்பத்தித் திறன் குறையக்கூடும் என நிலவும் அச்சங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். நாடு கடும் வறட்சியை எதிர்கொள்ளவிருப்பதாகவும், இது நீர்மின் உற்பத்தியைப் பெருமளவு பாதிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க விடுத்திருந்த எச்சரிக்கை குறித்து ஊடகங்களிடம் கருத்து […]