ஒன்டாரியோவில் Canada Goose இன் செயற்பாடுகள் – முதல்வர் டக் பேர்ட்

புகழ்பெற்ற கனடிய நிறுவனமான Canada Goose ஒன்டாரியோவில் தொடர்ந்து வளர்ந்து, இங்கிருந்தே நல்ல ஊதியமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி என்பதை நேரில் காண நான் சென்றேன் என ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். Canada Goose போன்ற நிறுவனங்கள் எங்கள் உற்பத்தித் துறையின் வலிமையையும், ஒன்டாரியோ தொழிலாளர்கள் உருவாக்கும் உலகத் தரமான தயாரிப்புகளையும் சந்தைப்படுத்திக் கொண்ருப்பது பெருமைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக பல கோடி ரூபா மோசடி
கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் 4 கோடி 97 இலட்சத்து 9 ஆயிரத்து 30 ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர மேலதிக நீதவான் ஐ.எம்.எஸ். பண்டார இலங்சிங்க உத்தரவிட்டுள்ளார். கொச்சிக்கடை, பள்ளன்சேனை, மார்ஷல் வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். களனி, ஹிம்புடுவெல்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பேலியகொட விசேட குற்றப் புலனாய்வுப் […]
லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

சந்தையில் தற்போது போதுமான எரிவாயு இருப்பு இருப்பதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்கு தேவையான எரிவாயு கையிருப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரையில் உள்ளதாகவும்,மேலதிக எரிவாயு இருப்புக்கள் மாலைத்தீவிலுள்ள சேமிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். எரிவாயுவை ஏற்றிய கப்பல் அமெரிக்காவிலிருந்து விரைவில் மாலைத்தீவை […]
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்புக்கு எதிர்ப்பு

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனம் ஒன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில், பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு அனுமதி வழங்கி இருந்தார். குறித்த அனுமதி […]
முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவது குற்றம்

இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (Drones) இயக்குவது தண்டனைக்குரிய குற்றம் எனவும், இது தொடர்பான சட்ட விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் இலங்கை விமானப்படை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு விடுத்துள்ளது. இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் எவராயினும், உரிய அதிகாரிகளிடம் முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. முக்கிய அறிவுறுத்தல்கள்: சட்ட நடவடிக்கை: கடந்த காலங்களில் அதிஉயர் பாதுகாப்பு வலையமைப்பிற்குள் (High Security Zones) சட்டவிரோதமாக ட்ரோன்களை இயக்கிய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனுமதி […]
புத்தாண்டுக்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்…

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, க.பொ.த சாதாரண தர வினாத்தாள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறைப் பரீட்சைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செயல்முறைத் தேர்வுகள் முடிந்தவுடன் […]
எரிவாயு விநியோகம் குறித்து புதிய அறிவிப்பு

திரவ பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் இன்று காலை (18) நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, எரிவாயு இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், ஒரு எரிபொருள் கப்பலும் இன்று காலை நாட்டினை வந்தடையவுள்ளது. நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் ஏற்கனவே 38,000 மெட்ரிக் டொன் LPG எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் 33,000 மெட்ரிக் […]
சவாலான தீர்மானங்கள் குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்

நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையைச் சீர்செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசு எடுக்கும் கடினமான தீர்மானங்களின் பின்னணி குறித்து விரிவாக விளக்கமளித்தார். அமைச்சரவை மற்றும் அரச நிறுவனத் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வுகளைக் காண்பது அவ்வளவு எளிதான […]
இரு அரச பேருந்துகள் மோதியதி விபத்து; நால்வர் பலி – 40 பேர் படுகாயம்

அம்பலந்தொட்ட – கதிர்காம பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவன பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதில் 40 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு – கதிர்காம பேருந்து ஒன்றும், திஸ்ஸவிலிருந்து கரப்பிட்டிய நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் நேருக்கு […]
மறு அறிவிப்பு வரும் வரை உடன் நடைமுறைக்கு வரும் திட்டம்

கொழும்பு நகரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் கூறுகையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்த முடிவு உடன் நடைமுறைக்கு வருகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதலின் விளைவாக நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு கொழும்பு மாநகர சபையின் நிதிக் குழு […]