வியாழக்கிழமை மாலை மார்க்கம் (Markham) நகரில் பாதசாரி ஒருவர் வாகனத்தால் மோதப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
வியாழக்கிழமை மாலை வாகனமொன்றின் சாரதியால் மோதப்பட்டதில் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பர் ஓக் டிரைவ் (Bur Oak Drive) மற்றும் மெக்கோவன் வீதிக்கு (McCowan Road) அருகிலுள்ள ஸ்டோன்பிரிட்ஜ் வீதி (Stonebridge Road) மற்றும் வாரன் பிராட்லி தெரு (Warren Bradley Street) சந்திப்புக்கு அருகில் மாலை 5:16 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சாரதி சம்பவ இடத்திலேயே நின்றாரா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.