மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த வேண்டும் – சாணக்கியன்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று பல்வேறு தரப்பினரும் முன்வைத்துள்ள யோசனைகளை கருத்திற் கொண்டு அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகித்த எமது கட்சியின் செயலாளர் எம். எ சுமந்திரன் பழையத் தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக, 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தைத் திருத்துவதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

எவ்வாறாயினும், அப்போதிருந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அதனை எடுத்துக்கொள்வதைப் பிற்போட்டதால், அந்த தனிநபர் பிரேரணை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் கடந்த ஆண்டு நான் சமர்ப்பித்த மாகாணசபைத் தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை குறித்து தற்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தது. அந்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாகாணசபைத் தேர்தல் மிகவும் அவசியமானது. ஏனெனில் இவ்விரு மாகாணங்களையும் அடிப்படையாகக் கொண்டே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.

மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறைமைக்கு அமைய நடத்தலாம் என்று சகல தரப்பினரும் வலியுறுத்துகிறார்கள். சட்டமா அதிபர் திணைக்களமும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் தான் பாராளுமன்ற விசேட செயற்குழுக்கு யோசனை முன்வைத்துள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

ve

வெசாக் தானசாலை வரிசையில் நின்றவர்களைக் கார் மோதியதில் 6பேர் உயிரிழப்பு: 7 பேர் படுகாயம்!

June 1, 2026

நேற்றிரவு மீகொட விபத்தில் காயமடைந்த மற்றொரு சிறு குழந்தை உட்பட 7 பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tamil

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 1, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

Patha

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களையும் பௌத்த சாசனத்தையும் பாரிய அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றது- பத்தரமுல்ல சீலரத்ன தேரர்!

June 1, 2026

இந்த நாட்டு மக்களின் சொத்துக்களையும், பௌத்த சாசனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு ஜனசெத பெரமுன மட்டுமே தகுதியான கட்சி என்பதை மக்கள்

sanakyan

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த வேண்டும் – சாணக்கியன்

June 1, 2026

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பழைய தேர்தல் முறைமையின்

trai

ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

May 31, 2026

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை