தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களையும் பௌத்த சாசனத்தையும் பாரிய அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றது- பத்தரமுல்ல சீலரத்ன தேரர்!

இந்த நாட்டு மக்களின் சொத்துக்களையும், பௌத்த சாசனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு ஜனசெத பெரமுன மட்டுமே தகுதியான கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாசனம் அழியும் தருணத்தில் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொமும்பில் சனிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களையும் பௌத்த சாசனத்தையும் பாரிய அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றது. அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வந்தவர்கள் இன்று நாட்டு மக்களின் பசியையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தையும் கவனத்தில் கொள்ளாது இருக்கின்றனர்.

டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் சாமானிய மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, வறுமையில் வாடும் மக்கள் ஒரு வேளை உணவை உட்கொள்வதற்கோ அல்லது பிள்ளைகளுக்கு ஒரு கோப்பை பால் கொடுப்பதற்கோ பெரும் சிரமப்படுகின்றனர். இவ்வாறான சூழலில், தற்போதைய ஆட்சியாளர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று அரச சார்பற்ற நிறுவனங்களின் பின்னணியில் செயற்படும் சில குழுக்கள் மகா சங்கத்தினரையும் பௌத்த சாசனத்தையும் திட்டமிட்டு அழிக்க முனைந்துள்ளன. இந்த ஆபத்தான போக்கை தடுத்து நிறுத்துவதற்கு மகா சங்கத்தினர் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய காலம் கனிந்துவிட்டது.

வெறும் தானம் பெற்றுக்கொள்வதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதாது, சாசனம் அழியும் தருணத்தில் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் உண்மையை எடுத்துக் கூறி, இந்த ஆபத்தான அரசியல் போக்குகளைத் தடுக்க மகா சங்கத்தினர் முன்வர வேண்டும்.

கடந்த தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்துவதற்குச் செயற்பட்டவர்கள், தற்போது அந்த அரசாங்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறியமை குறித்து வெட்கப்பட வேண்டும். வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

மக்கள் பசியால் வாடும் நிலையில், அரசாங்கம் இவ்வாறான அசமந்தப் போக்குடன் இருப்பது கண்டிக்கத்தக்கது. தற்போதைய அரசு மக்களின் சுமையை உணராமல், தாங்கள் பெற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கவே முயற்சிக்கிறது

எனவே, இந்த நாட்டு மக்களின் சொத்துக்களையும், பௌத்த சாசனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்பதற்கு ஜனசெத பெரமுன மட்டுமே தகுதியான கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும், இந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் டிராக்டர் சின்னத்துக்கு அதிகாரத்தை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். எமது நாட்டை அழிவில் இருந்து மீட்கவும், தற்போதைய அரசாங்கத்தின் பிடியில் இருந்து நாட்டைப் பாதுகாக்கவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்